சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

 
தமிழகம்

அண்ணா பல்கலை. மாணவர் உயிரிழப்பு எதிரொலி: கல்லூரிகள், பல்கலை.களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவு

உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: டெங்கு காய்ச்​சலில் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழந்த சம்​பவத்தை தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​கள், மற்​றும்பல்​கலைக்​கழகங்​களை தூய்​மை​யாக வைத்​திருக்க உத்​தர​விடப்​பட்​டிருப்​ப​தாக உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார்.

கொரிய குடியரசின் கல்வி அமைச்​சகம், சர்​வ​தேச கல்விக்​கான தேசிய நிறு​வனம், சென்​னை​யில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்​பில் ‘ஸ்​டடிஇன் கொரி​யா’ உயர்​கல்வி கண்​காட்சி ராஜா அண்​ணா​மலை புரம் லீலா பேலஸ் ஹோட்​டலில் நேற்று நடந்​தது. 12 கொரிய பல்​கலைக்​கழகங்​கள் பங்​கேற்ற இந்த கல்வி கண்​காட்​சியை தமிழக உயர்​கல்வி அமைச்​சர் விஸ்​வ​நாதன் தொடங்கி வைத்தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அண்ணா பல்​கலைக்​கழக மாணவரின் மரண அறிக்​கை​யில் உண்ணி காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார் என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. டெங்​கு, மலேரி​யா, ப்ளூ காய்ச்​சல் எது​வாக இருந்​தா​லும் பல்​கலைக்​கழகங்​கள் பாது​காப்​பாக, சுகா​தா​ர​மாக இருக்க வேண்​டும். அண்ணா பல்​கலைக்​கழக வளாகத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சுத்​தப்​படுத்​தும் பணியை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும், மாணவர்​களுக்கு உடனடி​யாகமருத்​துவ முகாம் நடத்த வேண்​டும் என்​றும் பதி​வாள​ருக்கு அறி​வுரை வழங்​கினேன்.

அதன் பேரில் பல்​கலைக்​கழகவளாகத்​தில் தூய்மை முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. பாதிப்பை தவிர்க்க, தமிழகம் முழு​வதும் கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள் அனைத்​தும் தூய்மை நிறைந்த வளாக​மாக இருக்க வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளேன். அனைத்து மாணவர்​களை​யும் அரசு பாது​காக்​கும்.

தனி​யார் பல்​கலை. மசோதா தனி​யார் பல்​கலைக்​கழக மசோதா ஆளுந​ரால் குடியரசு தலை​வருக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இது முக்​கிய​மான மசோ​தா​வாக பார்க்​கப்​படு​கிறது. திமுக அரசு கடந்த 2025-ல் கொண்​டு​வந்த தனி​யார் பல்​கலைக்​கழக மசோதா வாபஸ் பெறப்​பட்​டது. ஏற்​கெனவே உள்ள கல்வி நிறு​வ

னத்தை ஒரு பல்​கலைக்​கழக​மாக மாற்ற வகைசெய்​யும் மசோ​தா​தான் திமுக அரசின் மசோ​தா. நாங்​கள் இப்​போது கொண்​டு​வந்​திருப்​பது புதிய தனி​யார் பல்​கலைக்​கழகம் அமைக்க வகை செய்​யும் மசோதா ஆகும். அனைத்து அடிப்​படை உள்​கட்​டமைப்பு வசதி​களு​டன் உலக தரத்​தில் பல்​கலைக்​கழகம் அமைக்​கப்பட வேண்​டும் என்​ப​தற்​காக இந்த மசோ​தாவை கொண்​டு​வந்​துள்​ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT