தமிழகம்

ரூ.28 கோடி லஞ்சம்: வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல்விசாரணை நடத்த உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பெருங்​களத்​தூரில் தனி​யார் நிறு​வனம் சார்​பில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்ட முறை​கே​டாக திட்ட அனு​மதி வழங்க ரூ.28 கோடி லஞ்​சம் பெற்​றுள்​ள​தாக முன்​னாள் அமைச்​சர் வைத்​திலிங்​கத்​துக்கு எதி​ராக பதி​யப்​பட்ட வழக்​கில் மேல்​வி​சா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத்​ துறைக்கு உயர் நீதிமன்றம் அனு​மதி வழங்​கி​யுள்ளது.

கடந்த 2011-16 அதி​முக ஆட்சியில் வீட்டு வசதித்​துறை அமைச்​ச​ராக பதவி வகித்த வைத்​திலிங்​கம், பெருங்​களத்​தூரில் ஸ்ரீராம் பிராப்​பர்ட்​டீஸ் நிறு​வனம் மலையை ஒட்​டிய பகு​தி​யில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்ட விதி​களை மீறி திட்ட அனு​மதி வழங்​கி​யுள்​ள​தாக​வும்,

இதற்​காக ரூ. 28 கோடியை லஞ்​ச​மாக பெற்​றுள்​ள​தாக​வும் குற்​றம் சாட்டி அறப்​போர் இயக்​கம் சார்​பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்​புத் ​துறை​யில் புகார் அளிக்​கப்​பட்​டது. இந்த புகாரின்​பேரில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் 2 ஆண்​டு​கள் கழித்து திமுக ஆட்சி காலத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு செப்​டம்​பரில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்​தது. இந்​நிலை​யில் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் திமுக​வில் இணைந்​தார்.

அதையடுத்து இந்த வழக்​கில் வைத்​திலிங்​கத்​துக்கு எதி​ராக போது​மான ஆதாரங்​கள் இல்லை எனக்​கூறி வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்​புத்​துறை சார்​பில் கடந்த திமுக ஆட்​சி​யில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​யப்பட்​டது.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் தவெக தலை​மை​யில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் வைத்​திலிங்​கத்​துக்கு எதி​ரான வழக்கை முடித்து வைத்து தாக்​கல் செய்​யப்​பட்ட அறிக்​கையை திரும்​பப்​பெறவும, இந்த வழக்​கில் மேல்​வி​சா​ரணை நடத்​த​வும் அனு​மதி கோரி லஞ்ச ஒழிப்​புத்​துறை சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு மீதான விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ். கார்த்​தி​கேயன் முன்​பாக நடந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிப​தி, முன்​னாள் அமைச்​சர் வைத்​திலிங்​கம் மீதான வழக்​கில் மேல் விசா​ரணை நடத்த அனு​ம​தி​யளித்து லஞ்​ச ஒழிப்​புத் ​துறைக்கு உத்​தர​விட்​டார். அத்​துடன் இந்த வழக்​கில் 3 மாதங்​களில் வி​சா​ரணையை முடித்து இறு​தி அறிக்​கையை தாக்​கல்​ செய்​ய​வும்​ நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT