ஓபிஎஸ்

 
தமிழகம்

“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை” - ஓபிஎஸ்

என்.சன்னாசி

மதுரை: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரை அழைக்கவில்லை" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும். இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான்.

          

மீண்டும் ஒன்றிணையவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை” என்றார்.

“அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸுக்கு அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT