ஓபிஎஸ் | கோப்புப் படம்

 
தமிழகம்

“பழனிசாமியின் வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பவில்லை” - ஓபிஎஸ் பகிரங்க தாக்கு

செய்திப்பிரிவு

பழனிசாமியின் வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக-வின் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பெயர்தான் இருக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

          

அதை தூக்கிப் போட்டுவிட்டு, பொதுச்செயலாளராக பழனிசாமி தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டார். ஆனால் என்ன ஆனது? இவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் வந்த 10 தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். அவரை கட்சியினர் நம்பவில்லை. இப்போது அவர் அறிவிக்கும் வாக்குறுதிகளை மக்களும் நம்பவில்லை. அவர் சொல்வதெல்லாம் பொய் என்பதை அறிந்து கொண்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நோக்கம் நிறைவேற சிறு துரும்பாக நான் இருப்பேன்.

திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் பழனிசாமியின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை. அதனால்தான் தொடர் தோல்வியை மக்கள் அளித்தார்கள்.

தமிழகத்தில் இருந்தும் மக்களின் வரிப்பணம் மத்திய அரசுக்குச் செல்கிறது. அந்த நிதியை மாநிலங்களுக்கு திரும்ப வழங்கும்போது சமநிலையோடு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 18 வயதிலேயே நான் திமுக-வில் இருந்திருக்கிறேன். இப்போது திமுக-வில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT