கோப்புப்படம்

 
தமிழகம்

“தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டு” - அமைச்சர் ஷாஜகான்

அ.அருள்தாசன்

நெல்லை: “தமிழகத்தில் லஞ்சம் - ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சி நடந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நடைபெறும் குற்றச் சம்பவங்களையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் எப்போதும் ஆளுங்கட்சியைப் பாராட்ட மாட்டார்கள். கடந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருந்தது, மற்ற மாநிலங்களில் சட்டம் -  ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல் நிலவுவதாக பொய்யான பிரச்சாரங்களை பரப்புவது கண்டனத்துக்குரியது.

திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் களமிறக்கியபோதும் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு 12 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன. கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த 12 ஆயிரம் பேர் இந்த முறை வாக்களிக்கவில்லை. தவெகவுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால், மக்களைத் திசை திருப்பும் வகையில் எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்பி வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT