தமிழகம்

ஊட்டி ரோஜா கண்காட்சி நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

ஊட்டி: கோடை விழா​வின் தொடக்​க​மாக ஊட்டி ரோஜா பூங்​கா​வில் ரோஜா கண்​காட்சி நாளை தொடங்​கு​கிறது.

நீல​கிரி மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் கோடை சீசனை முன்​னிட்​டு, மாவட்ட நிர்​வாகம் மற்​றும் தோட்​டக்​கலைத் துறை சார்​பில் கோடை விழா நடை​பெறும். இந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால், கோடை விழா நடத்​து​வது பற்றி எந்த அறி​விப்​பும் வெளி​யாக​வில்​லை. தற்​போது, தேர்​தல் முடிந்து புதிய அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், மலர் கண்​காட்சி நடத்​து​வது தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யர் அரங்​கில், மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் உள்ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​தில், முதல்​கட்​ட​மாக ரோஜா கண்​காட்​சியை மே 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 5 நாட்​கள் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் மலர் கண்​காட்சி மற்​றும் குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் பழக்​காட்சி நடத்​து​வதற்​கான தேதி​கள் இறுதி செய்​யப்​பட​வில்​லை. ஊட்டி ரோஜா பூங்​கா​வில் ஏற்​கெனவே 4,000 ரகங்​களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது, பூங்​கா​வில் உள்ள செடிகள் கவாத்து செய்​யப்​பட்​டு, உரமிடப்​பட்​டு, ரோஜாக்​கள் பூக்​கத் தொடங்​கி​யுள்​ளன.

கோடை விடு​முறையை முன்​னிட்டு ஊட்டி வரும் சுற்​றுலா பயணி​கள் ரோஜா பூங்​கா​வில் பூத்​துள்ள ரோஜா மலர்​களை கண்டு ரசித்துச் செல்​கின்​றனர். கடந்த ஆண்டு 3 நாட்​கள் நடை​பெற்ற ரோஜா கண்​காட்​சியை சுமார் 35 ஆயிரம் பேர் பார்​வை​யிட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT