ஊட்டி: நீலகிரி மலை ரயில் முதன்முறையாக கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. அதன் பின்னர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது.
நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி இன்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
நீலகிரி மலை ரயிலின் 118-வது தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரயில்வே அதிகாரிகள் மற்றும் நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிர்வாகி நடராஜ் மற்றும் நிர்வாகிகள் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது மலை ரயிலின் சிறப்புகள் பற்றி அவர்கள் விளக்கினர். முன்னதாக, 118-வது மலை ரயில் தினத்தை ஒட்டி மலை ரயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.