தமிழகம்

ஆன்லைன், செயலி மூலம் மதுபானம் விற்பனை: இன்று முதல் அமலுக்கு வருகிறது

செயல்பாடுகள் பற்றி விடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்​லைன் மற்​றும் செயலி மூலம் மது​பானம் விற்​பனை செய்​யும் முறை இன்​று ​முதல் பயன்​பாட்டுக்கு வரவுள்​ளது.

ஆன்​லைனில் மது​பானம் வாங்​கு​வது குறித்த விளக்க விடியோவை டாஸ்மாக் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரம் டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்த கடைகளில் எம்​ஆர்​பி-ஐ விட கூடு​தல் விலைக்கு மது​பானம் விற்​கப்​படு​வ​தாக தொடர்ந்து குற்​றச்​சாட்டு வைக்​கப்​படு​கிறது. இந்த பிரச்​சினையை சரி செய்ய டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் மது​பான விற்​பனைக்கு தனி செயலி மற்​றும் இணைதளம் இன்​று​முதல் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ள​தாக டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ஆன்​லைனில் எப்​படி மது​பானம் வாங்​கு​வது என்​பது குறித்த விளக்க விடியோ ஒன்றை டாஸ்​மாக் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது.

ஆன்​லைன் முன்​ப​திவுக்​கான இணை​யதளத்​தில் நுகர்​வோர் முதலில் தங்​கள் அரு​கில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்​டும். அதன்​பின் தங்​களுக்கு தேவை​யான மது வகையை தேர்வு செய்ய வேண்​டும். பணம் செலுத்​தும் பக்​கத்​தில் செல்​போன் எண் கொடுத்து ஓடிபி பெற்​று, அதை பதிவு செய்​து, பணம் செலுத்த வேண்​டும். இதையடுத்​து, கியூஆர் குறி​யீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்​வோர் டவுன்​லோட் செய்​து, முன்​பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணி​யாளரிடம் காண்​பிக்க வேண்​டும்.

கடை பணி​யாளர் கடை​யில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்​வோரின் ரசிதை ஸ்கேன் செய்​வார், பின்​னர் நுகர்​வோர் பதிவு செய்து வந்த மது​பானத்தை எடுத்து அதை​யும் ஸ்கேன் செய்​வார், இரண்​டும் சரி​யாக உள்​ளது உறு​தி​யான பிறகு ரசீதை பிரின்ட் செய்​யும் பக்​கம் வரும். அதில் ரசீதை பிரின்ட் செய்து மது​பானத்தை நுகர்​வோரிடம் வழங்​கு​வார். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாபஸ் பெற அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​வகைகளை ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்​வது நடை​முறைக்கு வரவிருப்​ப​தாக​வும், அதற்​காக தனி இணை​யதளம் தொடங்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் அதிர்ச்சி அளிக்​கின்​றன.

இந்த இணை​யதளத்​தின் வாயி​லாக தமிழ்​நாட்​டின் எந்த மூலை​யி​லிருந்​தும் மொத்​த​முள்ள 4,048 மதுக்​கடைகளி​லும் என்​னென்ன மது​வகைகள் உள்​ளன. அவற்​றின் விலை எவ்​வளவு என்​பதை கண்​டறிந்து முன்​ப​திவு செய்ய முடி​யும். இது மது வணி​கத்​தை​யும், மதுப் புழக்​கத்​தை​யும் அதி​கரிக்​கச் செய்​யும். ஆன்​லைனில் மதுவை முன்​பதிவு செய்​வதை அனு​ம​திப்​பது அரசுக்கு பெருமை சேர்க்​காது. எனவே, மதுப்​புழக்​கத்தை அதி​கரிக்​கச் செய்​யும் மது முன்​பதிவு திட்​டத்தை தமிழக அரசு கைவிட வேண்​டும்.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT