தமிழகம்

பழைய ஓய்வூதியத் திட்டம்: மீட்பு இயக்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: பழைய ஓய்​வூ​தியத் திட்​டத்தை நடை​முறைப்படுத்த தமிழ்​நாடு பழைய ஓய்​வூ​தியத்திட்ட மீட்பு இயக்​கம் கோரிக்கை விடுத்துள்​ளது.

இதுதொடர்​பாக, இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்​கிணைப்​பாளர் ஆரோக்​கிய​தாஸ் திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தவெக தேர்​தல் அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது​போல, அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

கடந்த ஆட்​சி​யாளர்​களால் தமிழ்​நாடுஉறு​தி​யான ஓய்​வூ​திய திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.11,000 கோடி பட்​ஜெட்​டில் சேர்க்​கப்​பட​வில்​லை, அதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்​டும். ஜன.1-ம் தேதிக்கு முன்​னர் பங்​களிப்பு ஓய்​வூ​தி​யம் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற 50 ஆயிரம் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்கு மாத ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT