தமிழகம்

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நடத்தை விதி​களை அமல்​படுத்​தும் வித​மாக சென்னை விமான நிலை​யத்​தில் சிறப்பு அதி​காரி​களை தேர்தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும், தேர்தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​து உள்​ளன.

          

2106 பறக்​கும் படைகள், நிலை கண்​காணிப்பு படைகள் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. மேலும், விமான நிலை​யங்​களை​யும் கண்​காணிக்க தேர்தல் ஆணை​யம் முடிவு செய்​துள்​ளது.

அதன்​படி, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யம், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி ஆகிய​வற்றை கண்​காணிக்க, சிறப்பு அதி​காரி​களை இந்​திய தேர்தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் வரு​கை, புறப்​பாடு பகு​தி​களில் சுங்​கச் சோதனை​களை கண்​காணிக்க, சுங்​கத்​துறை இணை ஆணை​யர் அந்​தஸ்​தில், சிறப்பு அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அதே​போல், சென்னை விமான நிலைய கார்கோ பகு​தி​களில், சரக்​கு​கள் ஏற்​றும​தி, இறக்​குமதி பகு​தி​களில் சுங்​கச்சோதனை பிரிவு​களில் கண்​காணிப்​ப​தற்​காக இணை ஆணை​யர் அந்​தஸ்​தில் மற்​றொரு சிறப்பு அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இவர்​கள் சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​கள், பார்​சல்​களை தீவிர​மாக கண்​காணித்​து, சந்​தேகத்​துக்​கிட​மான தங்​கம், வெள்​ளி, மின்​சாதன பொருட்​கள், போதைப் பொருட்​கள், போதை மாத்​திரைகள், கணக்​கில் வராத ரொக்​கம் போன்​றவை​கள் வந்​தால், அவற்றை பறி​முதல் செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கடத்​தலின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார் என்று முழு​மை​யாக விசா​ரித்​து, டெல்லி​யில் உள்ள தலைமை தேர்தல் அதி​காரிக்கு உடனடி​யாக அறிக்கை அளிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டு உள்ளது.

அத்​துடன், சென்னை விமான நிலை​யத்​தில் உள்ள வரு​மான வரித் துறை​யினரும், தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​களும் கூடு​தல் கண்​காணிப்பு அலு​வலர்​களை நியமித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT