செல்​வ​ராஜ்

 
தமிழகம்

கும்பகோணத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் போதையில் கூச்சலிட்ட அதிகாரி சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணத்​தில் 72-வது அனைத்​திந்​திய கூட்​டுறவு வார விழா நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதில், உயர் கல்​வித்துறை அமைச்​சர் கோவி.செழியன், எம்​எல்​ஏக்​கள் சாக்​கோட்டை அன்​பழகன், துரை.சந்​திரசேகரன் மற்​றும் கூட்​டுறவுத்துறை உயர​தி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

விழா​வில் சிறப்பு விருந்​தினர்​கள் பேசிக் கொண்​டிருந்​த​போது, அந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வந்​திருந்த, தஞ்​சாவூர் கூட்​டுறவு வங்​கி​யின் கள மேலா​ள​ரான பட்​டீஸ்​வரம் செல்​வ​ராஜ்(51) மது​போதை​யில் தள்​ளாடியபடி கைகளை தட்டி கூச்​சலிட்​டுள்​ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்​சி​யடைந்த அதி​காரி​கள், அவரை அங்​கிருந்து வெளியே போகும்​படி கூறி​யும், அவர் அங்​கிருந்து செல்​ல​வில்லை.

இதையடுத்​து, அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார், அவரை அங்​கிருந்து வெளி​யேறும்​படி கூறி​யுள்​ளனர். பின்​னர் அவர் அங்​கிருந்து தள்​ளாடியபடி வெளி​யேறி​னார்.

இந்த சம்​பவத்​​தால் விழா​வில் சிறிதுநேரம் சலசலப்பு நில​வியது. இந்தசம்​பவம் தொடர்​பாக தஞ்​சாவூர் மத்​தி​யக் கூட்​டுறவு வங்கி இணைப் பதி​வாளர் வெ.பெரிய​சாமி விசா​ரணை நடத்​தி, செல்​வ​ராஜை சஸ்​பெண்ட் செய்து நேற்று உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT