தமிழகம்

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம்: போராடுவது ஜனநாயக உரிமை அல்ல என அமைச்சர் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்​தரம், சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் உண்​ணா​விரதம் இருந்த செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் செவிலியர்​கள் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். காலிப்பணியிடங்களே இல்லாத நிலையில் போராடுவது ஜனநாயக உரிமை அல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

திமுக அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு செய்த மேல்​முறை​யீட்டை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று முன்​தினம் சென்னையில் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டு கழகம் சார்​பில் நடந்த இந்த உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்​கள் பங்​கேற்​றனர் அதைத்​

தொடர்ந்​து, மாலை​யில் செவிலியர்களைக் கைது செய்து வாக​னத்​தில் ஏற்​றிய போலீ​ஸார் கிளாம்​பாக்​கத்​தில் இறக்கி விட்​டனர். இதையடுத்​து, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் செவிலியர்​கள் நள்​ளிர​வில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதைத்​தொடர்ந்து அவர் களைக் கைது செய்​து, ஊரப்​பாக்​கத்​தில் உள்ள திருமண மண்​டபத்தில் போலீ​ஸார் அடைத்தனர். அங்​கும் செவிலியர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர். செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதைக்கண்​டித்​து, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் நேற்று செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர்மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணா​விரதம் மேற்கொண்ட செவிலியர்​களைக் கைது செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது. தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களை நாடும் நோயாளி​கள் எண்​ணிக்கை 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக அமைச்​சர் பெரு​மை​யாகத் தெரி​வித்​துள்​ளார். ஆனால் அதற்கு ஏற்​றார்​போல மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்​க​வில்​லை.

கரோனா நேரத்தில், அரசுக்கு உறு​துணை​யாக இருந்​து, மக்​களுக்​காக போராடிய​வர்களை, ஆட்சி நிறைவடை​யும் நிலையில் சம ஊதி​யம் வேண்டி போராட வைப்​பது அரசுக்கு அழகல்ல. எனவே, முதல்​வர் தலை​யிட்​டு, செவிலியர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

காலியிடங்கள் இல்லை: இதனிடையே சென்​னை​யில் நேற்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: செவிலியர்​களை புறக்​கணிக்​கும் எண்​ணம் அரசுக்கு இல்​லை. போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​கள், இந்த அரசு பொறுப்​பேற்ற பிறகு பணி​யில் சேர்ந்​தவர்​கள் இல்​லை.

ஏற்​கெனவே 9 ஆண்​டுகளாக பணி​யாற்றி கொண்​டிருப்​பவர்கள். இவர்​களுக்கு பணிநியமனம் வழங்​கு​வது தொடர்​பாக அரசாணை உள்​ளது. காலியிடம் உரு​வாவதைப் பொறுத்​து, இவர்​களை சேர்க்க வேண்​டும்.

இந்த அரசுப் பொறுப்​பேற்​றதற்கு பிறகு 3,783 செவிலியர்​கள்பயன்​பெற்​றிருக்​கிறார்​கள். இன்னும் 8,322 பேர் பணிநிரந்​தரம் செய்​யப்பட வேண்​டும். பணி ஆணைகள் வழங்​கப்​படும் போதே காலிப்​பணி​யிடங்​கள் உரு​வாகும்​பட்​சத்​தில் பணிநிரந்​தரம் செய்​யப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. காலிப்​பணி​யிடங்​களே இல்லை என்ற நிலை​யில் போராட்​டங்​கள் நடத்​து​வது ஜனநாயக உரிமை அல்ல.

அதே​போல் அவர்​களுக்கு வழங்​கப்​பட்ட பணி ஆணை​களில் உள்ள விதி​முறை​களை தெரிந்து கொள்​வது நல்​லது. யாரை​யும் இந்த அரசு கைவிட​வில்லை. கரோனா காலங்களில் பணிபுரிந்த 714 பேர் பட்​டியலில் சேர்க்க இருக்​கிறோம்.போராடும் செவிலியர்​களுடன் பேச தயா​ராக இருக்​கிறோம். மருத்​துவக் கலந்​தாய்வு தமிழகத்​தில் காலியாகவுள்ள 23 எம்​பிபிஎஸ், 27 பிடிஎஸ் இடங்​களை நிரப்ப வரும் 20-ம் தேதி முதல்​ 23-ம்​ தேதி வரை சிறப்​பு கலந்​தாய்​வு நடத்​தப்​பட​வுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT