பிளக்​ஸ் பேனரை அகற்​றியதை கண்​டித்து தா​ராபுரத்​தில்​ நேற்​று சாலை மறியலில்​ ஈடு​பட்​ட நாதகவினர்​.

 
தமிழகம்

தாராபுரத்தில் பேனர் அகற்றியதை கண்டித்து நாதகவினர் சாலை மறியல்

செய்திப்பிரிவு

தாராபுரம்: தங்​கள் கட்​சி​யின் பிளக்ஸ் பேனரை அகற்​றியதை கண்​டித்து தாராபுரத்தில் நாம் தமிழர் கட்​சி​யினர் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். காவல் நிலை​யத்​தை​யும் முற்​றுகை​யிட்​டனர்.

கடந்த 30-ம் தேதி முதல்​வர் விஜய் தாராபுரம் வந்​த​போது நாதக சார்​பில் வைக்​கப்​பட்​டிருந்த பிளக்ஸ் பேனரை போலீ​ஸார் அகற்​றிய​தாக கூறப்​படு​கிறது. அதே​போல நேற்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் ரோடு ஷோ நடை​பெற்ற நிலை​யில் நாதக தேர்​தல் அலு​வல​கம் முன்பு வைக்​கப்​பட்​டிருந்த பிளக்ஸ் பேனரை போலீ​ஸார் அகற்​றினர். இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த கட்சி நிர்​வாகியை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

இதைக் கண்டித்து நாதக வேட்​பாளர் கார்த்​திகா மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காவல் நிலை​யத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடு​பட்​டனர். அதே நேரம் மு.க.ஸ்​டா​லின் வாகன பேரணி அவ்​வழி​யாக வந்​த​தால் பரபரப்பு நில​வியது. அதற்​குள் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்ற நாதக நிர்​வாகியை போலீ​ஸார் விடு​வித்​தனர். இதையடுத்​து, கட்​சி​யினர் கலைந்து சென்​றனர்.

SCROLL FOR NEXT