தமிழகம்

படாளம் சர்க்கரை ஆலை முறைகேடுகள் மீது நடவடிக்கை: மதுராந்தகம் நாம் தமிழர் வேட்பாளர் உறுதி

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: படாளம் சர்க்​கரை ஆலை​யில் நடை​பெற்​றுள்ள முறை​கேடு​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என மது​ராந்​தகத்​தில் போட்​டி​யிடும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் ஜானகி​ராமன் வாக்​குறு​தி​யளித்தார்.

இத்​தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி சார்​பில் கடந்த பொதுத்​தேர்​தலில் போட்​டி​யிட்ட ஜானகி​ராமன் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். கடந்த பொதுத்​தேர்​தலின்​போது 4,950 வாக்​கு​கள் பெற்​றார். தற்​போது, இடைத்​தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிடும் அவர் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

இதன்​படி, ஒழவெட்டி மற்​றும் அதன் சுற்​றுப்​புற கிராமப் பகு​தி​களில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட அவர், சட்​ட​விரோத கல்​கு​வாரி​கள் மூடப்​படும், படாளம் கூட்​டுறவு சர்க்​கரை ஆலை முறை​கேடு​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும், தொழிலா​ளர்​களின்​கோரிக்​கைகளும் நிறைவேற்​றப்​படும் என வாக்​குறுதி அளித்து வாக்கு சேகரித்​தார்.

SCROLL FOR NEXT