தமிழகம்

டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் விக்னேஷ் உறுதி

செய்திப்பிரிவு

பழநி: ​டாஸ்​மாக்கை தனி​யார்​மய​மாக்​கும் எண்​ணம் அரசுக்கு இல்லை என மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர் க.விக்​னேஷ் தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகம் முழு​வதும் பரவலாக மது​பாட்​டிலுக்கு கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வ​தாக குற்​றச்​சாட்டு உள்​ளது. கூடு​தல் விலைக்கு விற்​பனை செய்​யும் விற்​பனை​யாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. டாஸ்​மாக் பணி​யாளர்​களுக்​கான ஊதிய உயர்வு பரிசீலனை​யில் இருக்​கிறது. டாஸ்​மாக்கை தனி​யார்​மய​மாக்​கும் எண்​ணம் அரசுக்கு இல்​லை.

டாஸ்​மாக்​கில் நடந்த ஊழல்​கள் வெள்​ளை​யாக வெளியே தெரி​கிறது. பிறகு வெள்ளை அறிக்கை எதற்​கு? ஊழல் தொடர்​பாக நடவடிக்கை எடுப்​ப​தற்​காகத்​தான் குற்​றச்​சாட்டு சொல்லி வரு​கிறோம். 717 கடைகள் மட்​டுமின்​றி, தமிழகம் முழு​வதும் பொது​மக்​களுக்கு இடையூறாக இருக்​கும் டாஸ்​மாக் கடைகளை மூட​வும், இடம் மாற்​றம் செய்​ய​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதற்​கான, பட்​டியல் தயார் செய்​யும் பணி நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT