தமிழகம்

தேர்தல் வழக்குகள் முடியும் வரை 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை: தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். அதே​போல எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), சி.​விஜய​பாஸ்​கர் (வி​ராலிமலை), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகியோ​ரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தனர்.

இவர்​களது வெற்​றியை எதிர்த்த தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​போது, இந்த தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் அறிவிக்க தடை விதிக்​கக் கோரி பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வெங்​க​டாஜலப​தி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தாக்​கல் செய்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 5 தொகு​தி​களுக்​கும் இடைத்​தேர்​தல் அறிவிக்க தடை விதித்​தது.

இந்த தடையை நீக்​கக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர் தரப்​பில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, தேர்​தல் வழக்​கு​கள் முடி​யும் வரை 5 தொகு​தி​களுக்​கும் இடைத்​தேர்​தல் அறிவிக்​கும் திட்​டம் இல்​லை’ என்று கூறப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, நீதிப​தி​கள், விசா​ரணையை செப்​.8-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT