சென்னை: சொந்தமாக வாகனம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
முதல் நாளன்றே முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடந்த 2011 முதல் கொளத்தூரில் போட்டியிட்டு வருகிறார். 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது நான்காவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தெரிவித்திருந்தார். அவை:
> கையிலுள்ள ரொக்கம் - ஸ்டாலின்: ரூ.10,000. மனைவி துர்கா ஸ்டாலின்: ரூ.40,000
> வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு தொகை - ஸ்டாலின்: ரூ.10,64,943. துர்கா ஸ்டாலின் ரூ.47,75,424
> மோட்டார் வாகனம் - ஏதுமில்லை
> நகைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் - ஸ்டாலின்: ஏதுமில்லை. துர்கா ஸ்டாலின்: தங்க நகைகள் 720 கிராம், மதிப்பு ரூ.84,52,224.
> அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு - ஸ்டாலின்: ரூ.3.30 கோடி. துர்கா ஸ்டாலின்: ரூ. 1.32 கோடி.
> அசையா சொத்துகள் - ஸ்டாலின்: ரூ.2.96 கோடி. துர்கா ஸ்டாலின்: ரூ.2.11 கோடி.