தேனி மாவட்ட சிறையில் ஆய்வு நடத்திய ஏடிஜிபி. சங்கர்.

 
தமிழகம்

“கைதிகள் தப்பிக்கும் தவறு இனி நடக்காது” - தேனி மாவட்ட சிறையில் ஆய்வு நடத்திய ஏடிஜிபி உறுதி

செய்திப்பிரிவு

ஆண்டிபட்டி: கைதி​கள் தப்​பிச் சென்ற விவகாரம் தொடர்​பாக தேனி மாவட்ட சிறை​யில் சிறைத்​துறை ஏடி​ஜிபி சங்​கர் ஆய்வு நடத்​தினார். இதுபோன்ற தவறு இனி நடக்​காது என்று அவர் உறுதி அளித்​தார்.

தேனி மாவட்ட சிறை​யில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு போலீ​ஸாரை தாக்​கி​விட்டு 17 கைதி​கள் தப்​பிச் சென்​றனர். அவர்​களை போலீ​ஸார் 36 மணி நேரத்​தில் தேடிப் பிடித்து கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். பின்​னர் கைதி​கள் அனைவரும், தமிழகத்​தின் பல்​வேறு சிறைகளுக்கு மாற்​றப்​பட்​டனர். இந்த சம்​பவத்​தையடுத்து சிறைத்​துறை டிஜிபி சந்​தீப்​ராய் ரத்​தோர் மாற்​றப்​பட்​டார்.

இந்​நிலை​யில், சிறைத்​துறை ஏடி​ஜிபி சங்​கர், தேனி மாவட்ட சிறையை நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். கைதி​கள் அடைக்​கப்​பட்​டிருந்த சிறை, மூன்று கட்ட கதவு​களை கடந்து தப்​பிச் சென்ற விதம், போலீ​ஸார் மேற்​கொண்ட தடுப்பு முறைகள் குறித்து விசா​ரணை நடத்​தினார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தேனி சிறை​யில் பாது​காப்பு குறைபாடுகள் சரி செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து சிறைகளி​லும் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

நிர்​ணயித்த அளவைவிட கூடுதல் கைதி​கள் சில நேரங்​களில் சிறை​யில் இருப்​பது உண்டு. அவ்​வப்​போது அவர்​கள் மற்ற சிறைகளுக்கு மாற்​றப்​படுவர். தேனி சிறை​யில் கைதி​கள் தப்​பியது போன்ற தவறு இனிமேல் நடக்க வாய்ப்​பில்லை.

இவ்​வாறு அவர் கூறினார். ஆய்​வின்​போது, மதுரை சரக சிறைத் துறை துணைத் தலை​வர் முருகேசன் உள்​ளிட்ட அதி​காரி​கள் உடனிருந்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT