நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 
தமிழகம்

நாகை உள்பட 8 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வங்​கக்​கடலில் காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் உரு​வான​தால் நாகை உள்பட தமிழகத்​தின் 8 துறை​முகங்​களில் நேற்று ஒன்​றாம் எண் புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டது.

வங்​கக்​கடலில் உரு​வான குறைந்த காற்​றழுத்​தப் பகு​தி, காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டல​மாக வலு​வடைந்​துள்​ளது. இதன் காரண​மாக நாகை துறை​முகத்​தில் 1-ம் எண் தொலை​தூர புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டுள்​ளது.

நாகை மட்​டுமின்றி சென்​னை, கடலூர், எண்​ணூர், காட்​டுப்​பள்​ளி, புதுச்​சேரி, காரைக்​கால் மற்​றும் தூத்​துக்​குடி உள்​ளிட்ட 8 துறை​முகங்​களி​லும் 1-ம் எண் புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டுள்​ளது. மேலும் ராமேசுவரம், குளச்​சல் ஆகியதுறை​முகங்​களுக்​கும் இது குறித்த எச்​சரிக்கை செய்தி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் அடுத்த 24 மணி நேரத்​தில் ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

தொடர்ந்து மேற்​கு- வடமேற்கு திசை​யில் நகரும் காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலமானது, செப்​.23-ம் தேதி இரவு முதல் 24-ம் தேதி அதி​காலைக்​குள் விசாகப்​பட்​டினம் மற்​றும் கோபால்​பூர் இடையே வடக்கு ஆந்​தி​ரா- தெற்கு ஒடிசா கடற்​கரையை கடக்க வாய்ப்​புள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT