தமிழகம்

தமிழக பாஜகவை கையில் எடுக்கும் நிதின் நவீன் - அண்ணாமலையை ஆவலுடன் எதிர்நோக்கும் ஆதரவாளர்கள்!

குள.சண்முகசுந்தரம்

தேர்​தல் தோல்விக்​கான காரணத்​தைத் தேடி மற்ற கட்​சிகள் சுயபரிசோதனை​யில் சுறுசுறுப்​பாகி​விட்ட நிலை​யில், மத்​தி​யில் ஆளும் பாஜக மூச்​சு​வி​டா​மல் இருக்​கிறது. அந்​தளவுக்​கு, தமிழகத்​தில் எதிர்​பா​ராத தோல்​வியைச் சந்​தித்​திருக்​கிறது அந்​தக் கட்​சி.

2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக உறவை உதறித் தள்​ளியது அதி​முக. அப்​போது அண்​ணா​மலை தலை​மை​யில் இயங்​கிய தமிழக பாஜக, பாமக, அமமுக உள்​ளிட்ட கட்​சிகளு​டன் கூட்​டணி வைத்து தேர்​தலை எதிர்​கொண்​டது. அப்​போது 23 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட தாமரை, 11.24 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. 9 தொகு​தி​களில் பாஜக-​வும் 3 தொகு​தி​களில் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் இரண்​டா​மிடத்​தைப் பிடித்​தன. இவை எல்​லாமே அண்​ணா​மலை​யின் ஆளு​மைக்கு கிடைத்த வெகும​தி​களாகவே பார்க்​கப்​பட்​டன.

2026 சட்​டமன்​றத் தேர்​தலில் திமுக-வை சமாளிக்க பாஜக-வுக்கு அதி​முக-​வின் தயவு தேவைப்​பட்​டது. அதி​முக-வோ அண்​ணா​மலை தலை​வ​ராக இருக்​கும் வரை கூட்​ட​ணிக்கு வாய்ப்​பில்லை என முறுக்​கிக் கொண்​டது. இதையடுத்​து, அதி​முக-​வின் டீலை ஏற்​றுக் கொண்டு அண்​ணா​மலையை ஒதுக்​கி​விட்டு நயி​னார் நாகேந்​திரனை தலை​வர் பதவி​யில் உட்​கார​வைத்​தது டெல்​லி.

தேர்​தலுக்கு ஒரு வருடம் முன்​ன​தாகவே இந்த சம்​பிர​தா​யங்​களைச் செய்​து​முடித்த அமித் ஷா, “தமிழகத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி” எனவும் பெரு​மிதப் பிரகடனம் செய்​தார். ஆனால், ஆளுக்கு முந்தி கூட்​ட​ணிக்கு அச்​சா​ரம் போட்​டாலும் தொகு​தி​கள் எண்​ணிக்​கை​யிலும், விருப்​ப​மான தொகு​தி​களைப் பெறு​வ​தி​லும் பாஜக கோட்​டை​ விட்​டது.

அதனால் பல இடங்​களில் திமுக அமைச்​சர்​களு​டன் மல்​லுக்​கட்​டும் நிலைக்கு தள்​ளப்​பட்​டார்​கள் தாமரை வேட்​பாளர்​கள். கட் அண்ட் ரைட்​டாகப் பேசி தங்​களுக்கு சாதக​மான தொகு​தி​களை பெறு​வதற்கு நயி​னார் தெம்​பில்​லாமல் போனார். எல்​லா​வற்​றுக்​கும் மேலாக, அண்​ணா​மலைக்கே தொகுதி இல்​லாத நிலையை பாஜக-​வும் சேர்ந்தே உரு​வாக்​கியது. இதனால், பிடிப்​பில்​லாமலேயே பிரச்​சா​ரக் களத்​தில் நின்​றார் அண்​ணா​மலை.

இப்​படி, முதல் கோணல் முற்​றும் கோணலாகவே அதி​முக - பாஜக கூட்​ட​ணி​யின் தேர்​தல் வியூ​கங்​கள் நகர்ந்​த​தால் 27 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட பாஜக 2.97 சதவீத வாக்​கு​களை மட்​டும் பெற்​றது. வெறும் 976 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் ஊட்​டி​யில் மட்​டும் பார்​டரில் பாஸானது. இந்​தப் படு​தோல்விக்​கான காரணத்தை எந்​தப் புள்​ளி​யில் இருந்து ஆராய்​வது என்று தெரி​யாமல் டெல்லி பாஜக தலை​வர்​கள் விக்​கித்து நிற்​கிறார்​கள்.

இதனிடையே, அண்​ணா​மலையை மாற்​றிய விவ​காரம் குறித்து ஆர்​.எஸ்​.எஸ் தலை​வர்​களுக்​கும் அமித் ஷா தரப்​புக்​கும் அண்​மையில் சூடான விவாதங்​கள் நடந்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். தோல்விக்​கான காரணங்​கள் குறித்து தமிழக பாஜக தலைகளிடம் தனித்​தனியே அமித் ஷா கடிதம் கேட்​டிருப்​ப​தாக​வும் ஒரு தகவல்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அண்​ணா​மலை ஆதர​வாளர்​கள் சிலர், “தி​ரா​விடக் கட்​சிகளே மிரளும் அளவுக்கு தமிழகத்​தில் பாஜக-​வின் வளர்ச்​சியை பேச​வைத்​தார் அண்​ணா​மலை. ஆனால், ஆர்​.எஸ்​.எஸ் தலை​வர்​கள் சிலரின் பேச்​சைக்​கேட்டு அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தூக்​கி​னார்​கள். அப்​போதே கட்​சிக்கு சரிவு ஆரம்​ப​மாகி விட்​டது. ஆனாலும் டெல்லி தலை​வர்​கள் இதை சீரியஸாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை. அதி​முக-​வும் பழனி​சாமி​யும் பாஜக-வை ஜெயிக்​க​வைத்து விடு​வார்​கள் என நம்​பியதே இதற்​குக் காரணம். ஆனால், நடந்​தது என்​ன... மக்​கள​வைத் தேர்​தலில் மதுரை தொகு​தி​யில் பாஜக இரண்​டா​மிடம் பிடித்​தது.

அப்​போது மதுரை தெற்கு சட்​டமன்​றத் தொகு​தி​யில் பாஜக-வுக்​கும் மார்க்​சிஸ்ட் கட்​சிக்​கு​மான வாக்கு வித்​தி​யாசமே சுமார் மூவா​யிரம் தான். அந்​தக் கணக்​கில் தான் இந்​தத் தேர்​தலில் பாஜக மதுரை தெற்​கில் போட்​டி​போட்​டது. ஆனால், இம்​முறை கூட்​ட​ணி​யில் அதி​முக இருந்​தும் அங்கே பாஜக சுமார் 31 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றிருக்​கிறது. இதை எப்​படிப் புரிந்து கொள்​வது? அதி​முக-வை விடக்​கூ​டாது என பாஜக-​வினரும் பாஜக-வை விடக்​கூ​டாது என அதி​முக-​வினரும் ‘நண்​டு’ வேலை செய்​த​தால் தான் இந்​தக் கூத்​தெல்​லாம் நடந்​திருக்​கிறது.

மொத்​தத்​தில், பழனி​சாமியை பிடிக்​காத பாஜக-​வினரும் அண்​ணா​மலையை பிடிக்​காத அதி​முக-​வினரும் விசிலுக்கு ஓட்​டுப் போட்​டு​விட்​டுப் போய்​விட்​டார்​கள். பாஜக ஆதர​வில் 3 டிவி சேனல்​கள் இருக்​கின்​றன. அதையே தங்​கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் வைக்க பாஜக தலைமை தவறி​விட்​டது. விளைவு, அந்​தச் சேனல்​களை எல்​லாம் திமுக தனது கட்​டுப்​பாட்​டுக்​குள் வளைத்​துக் கொண்​டது.

2011-ல் மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த காங்​கிரஸ், திமுக-வை மிரட்​டியே 63 சீட்​களை வாங்​கியது. ஆனால் இம்​முறை, புலி வருது கதை​யாக மிரட்​டிக் கொண்டே இருந்த பாஜக-வுக்கு கிடைத்​தது என்​னவோ 27 தொகு​தி​கள். அதி​லும் குறிப்​பாக, அண்​ணா​மலைக்கு தொகு​தியே இல்​லாத​படி தந்​திர​மாகப் பார்த்​துக் கொண்​டார்​கள். இதற்​காகவா இத்​தனை பில்​டப் கொடுத்​தார்​கள்? அது​போகட்​டும், ஆரம்​பத்​திலிருந்தே திமுக-வுடன் முரண்​டு​பிடித்து வந்த காங்​கிரஸ் 5 தொகு​தி​களை வெல்​லும் போது பாஜக 10 தொகு​தி​களை​யா​வது எடுத்​திருக்க வேண்​டா​மா?

மொத்​தத்​தில், அதி​முக-​வின் பேச்​சைக் கேட்டு அண்​ணா​மலை​யைக் கைவிட்​ட​வர்​கள், இன்​ன​மும் தவறு செய்​கிறார்​கள். விஜய் பதவி​யேற்பு விழா​வில் தமிழிசை​யும் நயி​னார் நாகேந்​திரனும் யாரைக் கேட்டு பங்​கேற்​றார்​கள்​... பதவி​யேற்​றதும் எதிர்க்​கட்சி தலை​வர்​களைத் தேடிப் போய்ச் சந்​தித்த விஜய், உங்​கள் வீட்​டுக்கு வந்​தா​ரா? பிறகேன் இந்த அவசரம்?” என்​றார்​கள்.

ஓபிஎஸ்​ஸை​யும் தினகரனை​யும் அதி​முக கூட்​ட​ணிக்​குள் கொண்​டுவர சில பல பஞ்​சா​யத்​துகளை பேசிக் களைத்த டெல்லி பாஜக, இப்​போது, அதி​முக-வுக்​குள் நடக்​கும் களேபரங்​களை கண்​டும் காணாதது போல் இருக்​கிறது. “மே 4-ம் தேதிக்​குப் பிறகு பேசுவேன்” என்று சொன்ன அண்​ணா​மலை​யும் தேர்​தல் முடிவு​கள் குறித்து ஏதும் பேசாமலே இருக்​கிறார்.

பொது நிகழ்ச்​சிகளுக்​கும் யோசித்தே அவர் ஒப்​புதல் கொடுப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இந்த நிலை​யில், “தமிழக பாஜக-வை இனி நான் பார்த்​துக் கொள்​கிறேன் என பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் சொல்லி இருப்​பது மீண்​டும் அண்​ணா​மலை வரலாம் என்​கிற ஆவலை அவரது விசு​வாசிகள் மத்​தி​யில் அதிகப்​படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT