தமிழகம்

தமிழகத்தில் வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் வகையில் நீதிமன்றங்களை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வழக்​கு​களின் தேக்​கத்தை வெகு​வாக குறைக்​கும் வகை​யில், தமிழகம் முழு​வதும் கீழமை நீதி​மன்​றங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக, தமிழக சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​ கு​மார் தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்​கறிஞர் சங்​க​மான மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் சார்​பில், தமிழக சட்​டத்​துறை அமைச்​ச​ரான சி.டி.ஆர். நிர்​மல்​கு​மாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்​தப்​பட்​டது.

இந்​நிகழ்​வில், சங்​கத் தலை​வரும், மூத்த வழக்​கறிஞரு​மான வி.ஆர். கமல​நாதன் வரவேற்புரை ஆற்றி​னார். செய​லா​ளர் ஜெ.​போத்​தி​ராஜ், பொருளாளர் வி.டி.​பாலாஜி, நூல​கர் டி.​ராஜா மற்​றும் கமிட்டி உறுப்​பினர்​களான மியூஸ்​அலி, ஒய்​.க​வி​தா. ஜி. அருள்​செல்​வி, பி. இளை​ய​ராஜ்கு​மார், வி.வசந்​தகு​மார் உள்​ளிட்ட வழக்​கறிஞர்​கள் பலர் அமைச்​சருக்கு சால்வை அணி​வித்​தும், பரிசுகள் வழங்​கி​யும் கவுர​வித்​தனர்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் பேசுகை​யில், “பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் புகழ்​பெற்ற பல வழக்​கறிஞர்​களை​யும், நீதிப​தி​களை​யும் உரு​வாக்​கிய 150 ஆண்​டு​களுக்​கும் மேல் பழமை வாய்ந்த மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் சார்​பில் சட்​டத்​துறை அமைச்​சர் என்ற முறை​யில், என்னை அழைத்து பெரு​மைப்​படுத்​தி​யமைக்கு நன்​றிகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன். சட்​டம் மற்​றும் நீதித் துறை​யில் இன்​னும் பல்​வேறு குளறு​படிகள் இருந்து வரு​கின்​றன.

அவற்றை தீர்ப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை தமிழக அரசு மேற்​கொண்டு வரு​கிறது. வழக்குகளின் தேக்​கத்தை வெகு​வாக குறைக்​கும் வகை​யில் தமிழகம் முழு​வதும் உள்ள கீழமை நீதி​மன்​றங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரி்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

200 வழக்​கு​களுக்கு ஒரு நீதி​மன்​றம் என்ற வகை​யில் அதற்​கான பணி​களை துரிதப்​படுத்த முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​யுள்​ளார்”, என்​றார்.

இந்​நிகழ்​வில், அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயணன், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் மற்​றும் தவெக வழக்​கறிஞரணி மாநில நிர்​வாகி எஸ்​.அறிவழகன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT