திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 
தமிழகம்

விழுப்புரம் அருகே ஒட்டனந்தல் முருகன் கோயிலில் 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமம் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்​குனி உத்​திர திரு​விழா உற்​சவத்​தில்வேலில் தினசரி படைக்​கப்​படும் 9 எலுமிச்​சம் பழங்கள், இடும்​பன் பூஜை​யில் வைத்து ஏலம் விடும்நிகழ்வு நேற்று முன்​தினம் நள்​ளிரவு நடை​பெற்​றது. முதல் நாள் எலுமிச்​சம் பழம், ரூ.45 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது.

          

இதே​போல் இதர 8 பழங்​களும் ரூ.15 ஆயிரம், ரூ.16 ஆயிரத்​துக்கு ஏலம் போனது. இதன்​மூலம் 9 எலுமிச்​சம் பழங்​களை​யும் ரூ.1 லட்​சத்து 43 ஆயிரத்​துக்கு பக்​தர்​கள் ஏலம் எடுத்​தனர்.

வேலில் சொரு​கப்​பட்ட எலுமிச்​சம் பழத்தை உட்​கொண்​டால், குழந்தை வரம், திரு​மணம் கைகூடு​தல் மற்​றும் குடும்ப பிரச்​சினை​கள் நீங்​கும் என்​பது இக்​கோ​யிலுக்கு வரும் பக்​தர்​களின் நம்​பிக்​கை​யாகும்.

ஏலத்​தில், விழுப்​புரம் மட்​டுமின்றி பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் பக்​தர்​கள் பங்​கேற்​றனர். எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்​தவர்​கள், தங்​கள் உடலில் தண்​ணீரை ஊற்​றிக் கொண்டு பூசாரி முன்பு மண்​டி​யிட்டு எலுமிச்​சம் பழத்தை பெற்​றுக் கொண்​டனர். இடும்​பனுக்கு படைக்​கப்​பட்ட கரு​வாட்டு குழம்பு சாதம் பிர​சாத​மாக அனை​வருக்​கும் வழங்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT