தமிழகம்

கஞ்சா, போதைப் பொருள் ஆசாமிகளை கண்டுபிடிக்க வருகிறது புதிய கருவி!

செய்திப்பிரிவு

சென்னை: மது அருந்​தி​விட்டு வாக​னம் ஓட்​டு​வோரை கண்​டறி​யும், பிரீத்​திங் அனலைசர் கருவி போல் கஞ்சா உள்​ளிட்ட போதை பொருள் பயன்​படுத்​து​வோரை​யும் கண்​டறிய அதிநவீன கருவி அடுத்த மாதம் முதல் தமிழக காவல் துறை​யில் பயன்​பாட்​டுக்கு வர உள்​ளது.

தமிழக அரசு​ போதைப் பொருள் ஒழிப்​பில் தீவிரம் காட்டி வரு​கிறது. குறிப்​பாக மத்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, மாநில போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறிவு பிரிவு, மது​விலக்கு அமலாக்​கத் துறை, தீவிர போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறிவு பிரிவு உள்​ளிட்ட போலீ​ஸார் தமிழகம் முழு​வதும் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்றனர். மேலும் போதைப்பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்றும் விற்​பனை​யில் ஈடு​படு​வோரை கைது செய்​தும் வருகின்​றனர். இருப்​பினும் புதுப்​புது வகை போதை பொருளை பயன்​படுத்​து​வோர் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது.

வலி நிவாரண மருந்து மாத்​திரைகளைக் கூட போதைக்​காக சிலர் பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த வகை​யில் மட்​டும் கடந்த 3 ஆண்​டு​களில் 20 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக காவல் துறை​யினர் தெரிவிக்​கின்​றனர். கடந்த 2024-ம் ஆண்​டில் தமிழகம் முழு​வதும் போதைப் பொருள் கடத்​தி​யது மற்​றும் விற்​பனை செய்​தது தொடர்​பாக 11,205 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு 17,903 பேரை கைது செய்​ததுடன், அவர்​களிடம் இருந்து 21,423 கிலோ கஞ்சா மற்​றும், 559 கிலோ மற்ற வகை​யான போதைப்​பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும், 2025 செப்​டம்​பர் வரை 9,225 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு 13,443 பேரை கைது செய்து 20,146 கிலோ கஞ்சா, 97.5 கிலோ இதர​வகை போதைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இதனால் கடந்த ஆண்​டைக் காட்​டிலும் இந்த ஆண்டு போதைப்​பொருள் கடத்​தல் குறைந்​துள்​ள​தாக காவல்​துறை​யினர் தெரி​வித்​தனர்.

இதுஒருபுறம் இருக்க தமிழகத்​தில் மது அருந்​தி​விட்டு வாக​னம் ஓட்​டு​வோரை போலீ​ஸார் கண்​டறிந்து அபராதம் விதிப்​பது போல், கஞ்சா மட்​டுமல்​லாமல் செயற்கை போதைப்​பொருளை பயன்​படுத்​து​வோரை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி இந்த வகை​யான போதைப் பொருளை பயன்​படுத்​து​வோரை கண்​டறிய புதி​தாக அதிநவீன கருவி வரும் ஜனவரி மாதம் முதல் தமிழக காவல்​துறை​யில் பயன்​பாட்​டுக்கு வர உள்​ளது.

இதுதொடர்​பாக காவல் துறை​யினர் கூறிய​தாவது: தமிழக அரசு இந்த கருவிக்​காக ரூ.7.50 கோடி ஒதுக்​கீடு செய்​துள்ள நிலை​யில் அதற்​கான டெண்​டர் முடிந்து முதற்​கட்​ட​மாக 50 கருவி​கள் குறிப்​பிட்ட மாவட்​டங்​களுக்கு தலா 2 என வழங்​கப்பட உள்​ளது. இந்த கரு​வியைக் கொண்டு ஒரு​வரின் உமிழ் நீரை சிறிய பைப் மூலம் எடுத்து இந்த அதிநவீன கரு​வி​யில் செலுத்​திய சில விநாடிகளில் அவர் எந்த வகை​யான போதைப்​பொருள் பயன்​படுத்தி உள்​ளார் என்​பது தெரி​யும். அதனை வைத்து அவர் யாரிடம் இருந்து அதனை வாங்​கி​னார். அதன் பின்​னணி​யில் உள்​ளவர்​களைக் கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க முடி​யும். இந்த சோதனைக்கு ரூ.1,000 செல​வாகும்.

இந்​தத் திட்​டம் நாளடை​வில் தமிழகம் முழு​வதும் தீவிர​மாக செயல்​படுத்​தப்பட உள்​ளது. குறிப்​பாக ரயில் நிலை​யங்​கள், மற்​றும் பொது​மக்​கள் கூடும் இடங்​கள், வாகன சோதனை​யில் இந்த அதிநவீன கரு​வியை பயன்​படுத்தி கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​களை பயன்​படுத்​து​வோரை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க முடி​யும். காவல்​துறை நடவடிக்​கைகள் ஒரு​புறம் இருந்​தா​லும் மக்​கள் தங்​களது பிள்​ளை​களின் அன்​றாட செயல்பாடு​களில் போதைப்​பொருள் பயன்​படுத்​து​வது போன்ற ஏதேனும் மாற்​றம் தெரிந்​தால், அவர்​களைக் கண்​டித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி​னால் மட்​டுமே போதைப்​ பொருள்​ பழக்​கத்​தை கட்​டுப்​படுத்​த முடி​யும்​. இவ்​வாறு தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT