மயில்சாமி அண்ணாதுரை

 
தமிழகம்

புதிய பாடப் புத்தகங்கள் உலகத் தரத்தில் இருக்கும்: தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் உறுதி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தமிழகத்​தின் புதிய பாடப் புத்​தகங்​கள் உலகத்​தரம் வாய்ந்​த​தாக இருக்​கும் என இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், தமிழ்​நாடு புதிய பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழுத் தலை​வரு​மான மயில்​சாமி அண்​ணாதுரை தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தின் புதிய பாடத்​திட்​டத்​தில், முதல் 3 வகுப்​பு​களுக்​கான முதலாம் பரு​வப் புத்​தகங்​கள் சிறப்​பாக வெளிவந்​துள்​ளன. தமிழ் மற்​றும் ஆங்​கிலம் ஆகிய இரு மொழிகளி​லுமே எழுத, வாசிக்க, பேச, அடிப்​படை கணிதத்தை எளி​தில் கற்​றுக்​கொள்​ளும் வகை​யில் புத்​தகங்​கள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. அதற்கு ஏற்ப ஆசிரியர்​களுக்​கும் பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

வகுப்​பறை​கள் கரும்​பல​கையை தாண்​டி, ஸ்மார்ட் வகுப்​பறை​களாக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ஆகை​யால், குழந்​தைகள் விளை​யாட்​டாகவே கற்​றுக்​கொள்ள முடி​யும். புத்​தகத்​தில் உள்ள பாடங்​களை ஸ்மார்ட்​போர்டு மூலம் கதை​யாக, ஓவிய​மாக, உரை​யாடல்​கள் வழி​யாக எளி​தில் கற்​றுக்​கொள்​ளும் வசதி உள்​ளது. தற்​போது இது முதல் 3 வகுப்​பு​களுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்​து, அடுத்​தடுத்த வகுப்​பு​களுக்​குரிய புதிய புத்​தகங்​களுக்​கான வரையறை​களை விரை​வில் வெளி​யிட உள்​ளோம். அதில் இருந்து பெறப்​படும் கருத்​துகளின் அடிப்​படை​யில் புத்​தகங்​கள் உரு​வாக்​கப்​படும். சர்​வ​தேச அளவில் நடை​பெறும் போட்​டித் தேர்​வு​களை​யும் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர்​கள் எதிர்​கொள்​ளும் வகையி​லான சூழலை உரு​வாக்க உள்​ளோம்.

எனவே, புத்​தகங்​களை எளிமைப்​படுத்​திக் கொடுப்​பது மற்​றும் வகுப்​பறை​களில் ஆசிரியர்​களின் கற்​பித்​தல் பணி​களை எளிமை​யாக்​கு​வது ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. தமிழக புதிய பாடப்​புத்​தகங்​கள் உலகத்​தரம் வாய்ந்த அளவில் இருக்​கப்​போகின்​றன. சர்​வ​தேச அளவி​லான, அடுத்த தலை​முறைக்கு தேவை​யானவற்றைப் புத்​தகங்​களில் கொடுக்​கப் போகிறோம். கற்​றலை இனிமை​யாக்க முயற்சி செய்​து வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT