சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பி-கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவு: சென்னை மெட்ரோ மண்டல சிபிசிஐடி எஸ்பி-யாக உள்ள ஜி.ஜவஹர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி-யாகவும், சென்னை மண்டலஅமலாக்கப்பிரிவு எஸ்பி கே.பிரபாகர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி-யாகவும், சென்னை க்யூபிரிவு சிஐடி எஸ்பி இ.சுந்தரவதனம் தஞ்சாவூர் எஸ்பி-யாகவும், சென்னை தென் சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஏ.மயில்வாகனன் தென்காசி மாவட்ட எஸ்பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.