தமிழகம்

விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு: கழிவுநீர் பாதை உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்

செய்திப்பிரிவு

சென்னை: விவசாய நிலங்​களை வேறு பயன்​பாட்​டுக்கு மாற்​று​வதற்கு பல்​வேறு கட்​டுப்​பாடுகளை விதித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதற்​காக ஏற்​கெனவே உள்ள விதி​களில் திருத்​தங்​களைச் செய்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, விளை நிலங்​களை விவசாயம் அல்​லாத பயன்​பாட்​டுக்கு மாற்றி கட்​டு​மானப் பணிகள் அல்​லது பிற பணிகளை மேற்​கொள்​வதற்கு பல்​வேறு ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும்.

ஒற்றை சாளர போர்ட்​டல்: இதற்​காக ஆன்​லைன் வாயி​லாக ஒற்றை சாளர போர்ட்​டலில் விண்​ணப்​பிக்க வேண்​டும். அத்​துடன் சுய சான்​றிட்ட நிலத்​தின் கிரயம் அல்​லது குத்​தகை பத்​திர நகல், நிலத்​தின் பட்டா நகல், நிலத்​தில் கழிவுநீர் மற்​றும் மழைநீர் வெளியேறும் வழியை காட்​டும் வரைபடம், முறை​யான அளவீடுகளு​டன் கூடிய நில வரைபடம், மனைப்​பி​ரிவு, உட்​பி​ரிவு செய்த வரைபடம் அல்​லது கட்​டிட வரைபடம், நிலத்தை சுற்றி 500 மீட்​டர் தூரத்​துக்​குள் உள்ள அனைத்து கட்​டிடங்​களின் வரைபடம் ஆகிய​வற்றை சமர்ப்​பிக்க வேண்​டும்.

மேலும், புறம்​போக்கு, அரசு மற்​றும் இதர நிலங்​கள் இதில் இணைக்​கப்​பட​வில்லை என்​ப​தற்​கான விண்​ணப்​ப​தா​ரரின் ஆன்​லைன் பிர​மாண பத்​திரம், நிலத்​தின் சிட்டா நகல், நடப்​பாண்டு உள்​ளிட்ட 3 ஆண்​டுகளுக்​கான அடங்​கல் சான்று ஆகிய​வற்​றையும் சுய சான்​றிட்டு இணைக்க வேண்​டும்.

தடை​யில்லா சான்​றிதழ்: ஈர நிலமாக இருப்​பின், வரு​வாய் கோட்​டாட்​சி​யர், வேளாண்மை துறை​யின் இணை இயக்​குநர், நீர்​வளத் துறை செயற்​பொறி​யாளர் ஆகிய அதி​காரி​களிடம் சமர்ப்​பித்து தடை​யில்லாச் சான்​றிதழ் பெற வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT