தமிழகம்

குரூப்-2, 2 ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளி​யிட்​டது. அதன்​படி, குரூப்-2 பதவி​களில் 41 காலி​யிடங்​கள், குரூப்-2 ஏ பதவி​களில் 780 இடங்​கள் மொத்​தம் 821 காலி​யிடங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு வரு​கிற 9-ம் தேதி (புதன்​கிழமை) முடிவடைகிறது.

பட்​ட​தா​ரி​களும், முதுகலை பட்​ட​தா​ரி​களும் போட்​டிப்​போட்டு விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். இதற்​கிடையே, குரூப்​-2, 2-ஏ தேர்​வில் புதிய பணி​யிடங்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. அதோடு காலி​யிடங்​களின் எண்​ணிக்​கை​யும் உயர்த்​தப்​பட்​டுள்ளது.

குரூப்-2 ஏ தேர்​வில் தமிழ்​நாடு தலை​மைச் செயலக உதவி​யாளர் (நி​திப்​பிரிவு) காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 7-லிருந்து 17 ஆக அதி​கரிக்​கப்​படு​கிறது. மேலும், குரூப்-2 தேர்​வில் குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு பணி​கள் துறை நன்​னடத்தை அலு​வலர் (காலி​யிடங்​கள் 2) புதி​தாக சேர்க்​கப்​படு​கிறது.

அதே​போல், குரூப்-2 ஏ தேர்​வில், தொழிற்​கூட்​டுறவு சங்​கங்​களின் மேற்​பார்​வை​யாளர் (காலி​யிடங்​கள் 10), குழந்​தைகள் நலன், சிறப்பு பணி​கள் துறை உதவி​யாளர் (காலி​யிடங்​கள் 3 ) ஆகிய பதவி​கள் புதி​தாக சேர்க்​கப்​படு​கின்​றன. இதனால் ஒருங்கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வில் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 846 ஆக அதி​கரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT