தாம்​பரம் மாநகர காவல் ஆணை​ய​ர் ஏடிஜிபி அமல்​ராஜ்

 
தமிழகம்

தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையர்கள் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

தாம்பரம் / ஆவடி: தாம்​பரம் காவல் ஆணை​ய​ராக கடந்த ஜூலை மாதம் பதவி​யேற்ற அபின் தினேஷ் மோதக் பணி​மாற்​றம் செய்​யப்​பட்ட நிலை​யில், ஏற்​கெனவே இங்கு ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி அமல்​ராஜ் மீண்​டும் தாம்​பரம் மாநகர காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டார். அவர் நேற்று பொறுப்​பேற்​றார். அவருக்கு காவல் துறை அதி​காரி​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

இதே​போல, ஆவடி காவல் ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி கி.சங்​கர், சிறைத் துறை இயக்​குந​ராகப் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டார்.

இதையடுத்​து, தென் மண்டல ஐ.ஜி.​யாகப் பொறுப்பு வகித்து வந்த பிரேம் ஆனந்த் சின்​ஹாவுக்கு ஏடிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டு, ஆவடி காவல் ஆணை​ய​ராக நேற்று பொறுப்​பேற்​றார். அவருக்கு கூடு​தல் ஆணை​யர் பவானீஸ்​வரி மற்​றும் அதி​காரி​கள் வாழ்த்​து தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT