மதுரை​யில் நடந்த தொல்​லியல் துறை கருத்​தரங்​கில் பேசிய அமைச்​சர் தங்​கம் தென்​னரசு. படம்​: எஸ்​.கிருஷ்ணமூர்​த்​தி

 
தமிழகம்

புதிதாக 6 இடங்களில் அருங்காட்சியகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் 6 இடங்​களில் அருங்​காட்​சி​யகங்​கள் அமைக்​கப்பட உள்​ள​தாக அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கூறி​னார்.

தொல்​லியல் துறை சார்​பில் ‘தமிழ்​நாடு அகழாய்​வு​களில் அண்​மைக்​கால அறி​வியல் ஆய்​வு​கள்’ என்ற தலைப்​பில் 3 நாட்​கள் நடை​பெறும் பன்​னாட்​டுக் கருத்​தரங்​கம் மதுரை​யில் நேற்று தொடங்​கியது. கருத்​தரங்கை தொடங்​கி​வைத்து அமைச்​சர் தங்​கம் தென்​னரசு பேசி​ய​தாவது: தமிழர்​களின் பாரம்​பரி​யத்தை உறு​திப்​படுத்​தும் அதே நேரத்​தில், புதிய கண்​டு​பிடிப்​பு​களுக்​கான அறி​வியல் அணுகு​முறையை நாங்​கள் முன்​னெடுத்து வரு​கிறோம்.

          

‎ஆதிச்​சநல்​லூர் மற்​றும் சிவகளை​யில் கண்​டெடுக்​கப்​பட்டநெல் மற்​றும் சிறு​தானி​யங்​கள் 3,500 ஆண்​டு​களுக்கு முன்பே இங்கு நன்​செய் மற்​றும் புன்​செய் சாகுபடி முறை​கள் இருந்​ததை உறு​திப்​படுத்​துகின்​றன.

த‎மிழ்​நாட்​டில் கண்​டறியப்​பட்ட 90 சதவீத குறி​யீடு​கள் சிந்​து​வெளிக் குறி​யீடு​களு​டன் ஒத்​துப்​போகின்​றன. ‎பண்​டைய​காலச் சூழலைப் புரிந்​து​கொள்ள தாவர​வியல் மற்​றும் மண் சார்ந்த ஆய்​வு​கள் பல நிறு​வனங்​களு​டன் இணைந்து நடை​பெறுகின்​றன.

நெல்​லை, கீழடி ஆகிய இடங்​களில் 2 அருங்​காட்​சி​யகங்​களை அமைத்​துள்​ளோம். அழகன்​குளத்​தில் நாவாய் அருங்​காட்​சி​யகம், தஞ்​சாவூர் மற்​றும் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் சோழர் அருங்​காட்​சி​யகங்​கள், தரு​மபுரி​யில் நடு​கல் அருங்​காட்​சி​யகம், கொடுமணலில் நொய்​யல் அருங்​காட்​சி​யகம், மாமல்​லபுரத்​தில் கலாச்​சார அருங்​காட்​சி​யகம் ஆகிய​வற்றை நிறுவ நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

முன்​ன​தாக, தொல்​லியல் துறை சார்​பில் அமைக்​கப்​பட்ட, கற்​காலம் முதல் தற்​காலம் வரை மனித நாகரி​கம் வளர்ந்து வந்​தது தொடர்​பான அகழாய்​வில் கிடைத்த பொருட்​களின் கண்​காட்​சி​யைத் தொடங்​கி​வைத்​துப் பார்​வை​யிட்​டார். பாறை​குளத்​தில் உள்ள கற்​கருவி​கள், பழங்​கற்​கருவி​கள் தயாரிக்​கும் இடங்​கள் ஆகியவை குறித்த புத்​தங்​கள் வெளி​யிடப்​பட்​டன.

நிகழ்​வில், மதுரை ஆட்​சி​யர் பிர​வீன் குமார், உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனத் தலை​வர் பால​கிருஷ்ணன், துணை மேயர் நாக​ராஜன், தமிழ்​நாடு தொல்​லியல் துறை கல்வி மற்​றும் ஆய்வு ஆலோ​சகர் ராஜன், தொல்​லியல் துறை இணை இயக்​குநர் சிவானந்​தம் உள்​ளட்​டோர் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT