தமிழகம்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள், குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துஉள்​ளது.

இதுதொடர்​பாக நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் தனித்​தனியே வெளி​யிட்​டுள்ள இரு அரசாணை​களில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழக அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம்​-2026 அமல்​படுத்​தப்பட உள்​ளது.

யுனைடெட் இந்​தியா இன்​சூரன்ஸ் நிறு​வனம் மூலம் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டம் வரும் ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30-ம் வரை 5 ஆண்டு காலம் நடை​முறை​யில் இருக்​கும். புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தின்​படி, அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் (வாழ்க்கை துணை உள்​பட) மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தார்​களும் அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வ​மனை​களில் ரூ.7.50 லட்​சம் வரை பணமில்லா முறை​யில் மருத்​துவ உதவி பெறலாம்.

மேலும் குறிப்​பிட்ட 46 வகை​யான தீவிர நோய்​களுக்கு ஒரு குடும்​பத்​துக்கு ரூ.12 லட்​சம் வரை மருத்​துவ சிகிச்சை பெறலாம். இத்​திட்​டத்​தில் 2,992 சிகிச்​சைகள், அறுவை சிகிச்​சைகள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 1535 தனி​யார் மருத்​து​வ​மனை​கள், அரசு மருத்​து​வ​மனை​கள் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், தூய்மை பணி​யாளர்​கள், சத்​துணவு ஊழியர்​கள் உ்ள்​ளிட்ட பணி​யாளர்​களும் இந்த திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​கிறார்​கள். குறைந்த ஊதி​யம் பெறும் ஊழியர்​களின் பிரீமி​யத்தை தமிழக அரசே ஏற்​றுக்​கொள்​ளும். இந்த புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம், சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்​களுக்​கும் (வாழ்க்கை துணை உள்​பட), தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்ட (டேப்​ஸ்) ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்​கும் பொருந்​தும். இவ்​வாறு அந்த அரசாணை​களில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT