தமிழகம்

மாதாந்திர பாஸ் பெறும் பயணிகளுக்கு ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய வசதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது.

இந்த குழு​மம் வாயி​லாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி உரு​வாக்​கப்​பட்டு கடந்த செப்​.22-ம் தேதி முதல் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த செயலி வாயி​லாக மெட்ரோ ரயில், மின்​சார ரயில், மாநகரப் பேருந்​துகளில் பயணிப்​ப​தற்​கான டிக்​கெட்​களை க்யூஆர் குறி​யீடு வழி​யாகப் பெறலாம்.

          

இந்த 3 சேவை​களுக்​கும் சேர்த்து அல்​லது தனித் தனி​யாக​வும் மக்​கள் இந்த செயலி​யில் டிக்​கெட் பெற முடி​யும். இந்த செயலியை 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயணி​கள் பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

இந்த நிலை​யில் மாநகரப் பேருந்​துகளில் ரூ.1,000, ரூ.2,000-க்​கான மாதாந்​திர பேருந்து அட்​டைகளும் இதில் விநி​யோகிக்​கப்​படு​கிறது.

அதன்​படி, செயலி மூலம் புகைப்​படம் மற்​றும் தொகையை பதிவேற்றி மாதம்​தோறும் பயண அட்​டைகளைப் புதுப்​பித்​துக்​கொள்​ளும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

பேருந்​தில் ஏறியதும் ‘சென்னை ஒன்’ செயலி​யில் உள்ள மாதாந்​திர பயண அட்​டை​யில், பயணிக்​கும் பேருந்​தின் எண்​ணைப் பதி​விடு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டிருந்​தது.

ஒவ்​வொரு முறை பயணத்​தின் போதும், பேருந்​தின் எண்​ணைப் பதி​விடு​வது சிரம​மாக இருப்​ப​தாக பயணி​கள் புகார் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், இனி அந்த செயலி​யில் உள்ள மாதாந்​திர பேருந்து அட்​டையை நடத்​துநரிடம் காண்​பித்​தால் போதும் என்று கும்டா தெரி​வித்​துள்​ளது. இந்த அறி​விப்பு பயணி​களிடையே வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

SCROLL FOR NEXT