தமிழகம்

அரசுப் பணிகளில் தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை: புதிய திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பணி​களில் புதி​தாக விண்​ணப்​பிப்​பவர்​களுக்கு மட்​டுமே இனி தமிழ் வழி​யில் கல்வி படித்​தமைக்​கான முன்​னுரிமை வழங்​கும் திருத்​தச் சட்ட முன்​வடிவு சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்​ததும், அரசுப் பணி​களில் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு முன்​னுரிமை வழங்​குதல் குறித்த திருத்​தச் சட்ட முன்​வடிவை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் தாக்​கல் செய்​தார்.

          

அதன் நோக்க காரண உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பணி​களில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்​பப்பட வேண்​டிய அனைத்து காலிப் பணி​யிடங்​களி​லும் 20 சதவீதம் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் சட்​டம், 2010-ம் ஆண்டு கொண்டுவரப்​பட்​டது.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அரசுப் பணி​யில் இருப்​பவர்​கள் தமிழ் வழி​யில் கல்வி பயின்​றவர்​கள் என்ற வகைப்​பாட்​டின்​கீழ் முன்​னுரிமை நியமனத்​துக்கு தகு​தி​யற்​றவர்​கள் என்ற தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. இந்த தீர்ப்பை தெளிவு படுத்​தும் வகை​யில் சட்​டத்​தில் திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, இனிவரும் காலங்​களில் புதி​தாக பணிக்கு சேருபவர்​களுக்கு மட்​டுமே தமிழ்வழியில் கல்வி பயில்​வதற்​கான முன்​னுரிமை வழங்​கப்​படும். ஏற்​கெனவே, அரசுப் பணி​யில் நியமிக்​கப்​பட்ட நபர்​கள், மிகை ஊதி​யம் கொண்ட பதவி​களில் குறிப்​பிட்ட காலிப் பணி​யிடங்​களுக்கு மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும்.

எனினும், 2010-ம் ஆண்டு முதல் இது​வரை தமிழ் வழி முன்​னுரிமை​யில் நடை​பெற்ற பணிநியமனங்​கள் செல்​லும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்த சட்ட முன்​வடிவு இன்று ஆய்​வுக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்​டு, நிறைவேற்​றப்பட உள்​ளது.

SCROLL FOR NEXT