கோப்புப்படம்

 
தமிழகம்

“திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” - அமைச்சர் வன்னி அரசு சாடல்

வெற்றி மயிலோன்

சென்னை: “பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் விசிக ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய - திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான்.

திராவிடக் கோட்பாட்டையும், சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் அண்ணாவும் கருணாநிதியும். அப்படிப்பட்ட கருணாநிதியை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.

அதுமட்டுமல்ல, கருணாநிதி அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான்.

இப்படி கோட்பாட்டு வழியிலும், தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT