முதல்வர் விஜய்

 
தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட அனைத்து வழக்​கு​களும் ரத்து செய்​யப்​படு​வ​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு மற்​றும் தேர்வு முறை​கேடு​களைக் கண்​டித்து டெல்லி ஜந்​தர் மந்​தரில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் சமீபத்​தில் போராட்​டம் நடத்​தப்​பட்​டது. இதில் மாணவர்​கள், இளைஞர்​கள் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர். கடந்த ஜூலை 20-ம் தேதி சிஜேபி சார்​பில் நாடாளு​மன்​றம் நோக்கி பிரம்​மாண்ட பேரணி நடத்​தப்​பட்​டது. அப்​போது மிகப்​பெரிய அளவில் வன்​முறை வெடித்​தது. போராட்​டக்​காரர்​களை கலைக்க போலீ​ஸார் தடியடி நடத்​தி, கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதற்​கிடையே, டெல்​லி​யில் நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரி​வித்து நாட்​டின் பல மாநிலங்​களி​லும் மாணவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, லக்னோ, பெங்​களூரு, சண்​டிகர், சூரத், பாட்​னா, ஹைத​ரா​பாத் என பல்​வேறு நகரங்​களி​லும் கால​வரையற்ற போராட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டன.

தமிழகத்​தில் சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் அரங்​கம், தியாக​ராய நகர் பாலன் இல்​லம் உள்​ளிட்ட இடங்​களில் மாணவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரை​உல​கினர் என பல்​வேறு தரப்​பினரும் ஆதரவு தெரி​வித்​தனர். தொடர்ந்து 36 நாட்​கள் நடை​பெற்ற போராட்​டம் காரண​மாக, மத்​திய கல்வி அமைச்​சர் பதவியை தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.

மேலும், ‘போ​ராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​கள் ரத்து செய்ய வேண்​டும். நீட் தேர்வு விவ​காரத்​தில் தற்​கொலை செய்து கொண்​ட​வர்​களின் குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும்’ என மாணவர் சங்​கங்​கள் மூலம் மத்​திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக, மாணவர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்ய வேண்​டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் நீட் தேர்​வுக்கு எதி​ராக போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான அனைத்து வழக்​கு​களை​யும் ரத்து செய்​வ​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்​தில் கூறியுள்ளதாவது: தமிழகத்​தில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட அனைத்து வழக்​கு​களும் முதல்​வர் விஜய் உத்​தர​வின்​படி ரத்து செய்​யப்​படு​கின்​றன. இதர விவரங்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். முதல்​வருக்கு மனமார்ந்த நன்​றி. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘நீட் தேர்​வுக்கு எதி​ராக தமிழகம் முழு​வதும் மாணவர்​கள், மாணவர் அமைப்​பினர், அரசி​யல் கட்​சி​யினர் என பல தரப்​பினரும் போராட்​டம் நடத்​தினர். 1,000-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்து விடுவிக்​கப்​பட்​டனர். அவர்​கள் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ள​தால், மாணவர்​கள் மீதான வழக்​கு​கள் மட்​டும் ரத்து செய்​யப்பட உள்​ளன. அதற்​காக, வழக்கு பதிவு செய்​யப்​பட்ட மாணவர்​களின் விவரங்​கள்​ மாவட்​ட வாரி​யாக சேகரிக்​கப்​பட்​டு வரு​கின்​றன” என்​று தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT