பேருந்தில் மறதியாக விட்டுச்சென்ற மாணவரின் ஹால் டிக்கெட்டை மீட்டு பரமக்குடி பேருந்து நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.

 
தமிழகம்

பரமக்குடியில் பேருந்தில் மறதியாக மாணவர் விட்டுச் சென்ற நீட் தேர்வு ஹால் டிக்கெட் உரிய நேரத்தில் ஒப்படைப்பு

பத்திரிகையாளர், போக்குவரத்து அதிகாரிகள் உதவியால் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

பரமக்குடி: அரசுப் பேருந்​தில் விட்​டுச் சென்ற நீட் தேர்​வுக்​கான நுழைவுக்​கூட அனு​ம​திச்​சீட்டு வைத்​திருந்த பைலை அதி​காரி​கள் உதவி​யுடன் மாணவரிடம் ஒப்​படைத்த சம்​பவம் நெகிழ்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்குடி அரசுக் கல்​லூரி மற்​றும் அரசு மகளிர் கல்​லூரி என இருதேர்வு மையங்​களில் நேற்று நீட் தேர்வு நடந்​தது. ராம​நாத​புரத்​தைச் சேர்ந்த மாணவர் உதயகு​மார் பரமக்​குடி​யில் நீட் தேர்வு எழுத அரசுப் பேருந்​தில் சென்​றார்.

அப்​போது தேர்​வுக்​கூட நுழைவுச்​சீட்டு (ஹால் டிக்​கெட்), ஆதார் அட்டை மற்​றும் சான்​றிதழ்​கள் வைத்​திருந்த பைலை மறந்​து​விட்டு பரமக்​குடி​யில் இறங்​கி​னார்.

தேர்வு மையத்​துக்கு வந்த பின்​னர்​தான் மாணவர் உதயகு​மாருக்கு பேருந்​தில் மறந்து வைத்​து​விட்டு வந்​தது நினை​வுக்கு வந்​தது. இதுகுறித்து நீட் தேர்வு நடந்த பரமக்​குடி அரசுக் கல்​லூரிக்கு வெளியே நின்​றிருந்த பத்​திரி​கை​யாளர்​களிடம் விவரத்​தைத் தெரி​வித்து மாணவர் உதயகு​மார் உதவி கேட்​டார்.

பத்​திரிக்​கை​யாளர்​கள் உடனடி​யாக பரமக்​குடி அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தைத் தொடர்பு கொண்​டனர். மாணவர் வந்த பேருந்து மானாமதுரை அருகே சென்று விட்​டது தெரிய​வந்​தது.

தொடர்ந்​து, அரசுப் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் பேருந்து ஓட்​டுநர், நடத்​துநருக்​குத் தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து பரமக்​குடி வழி​யாகச் செல்​லும் மற்​றொரு பேருந்து மூலம் பைலை பரமக்​குடிக்கு அனுப்​பினர்.

பின்​னர் மாணவர் உதயகு​மாரிடம் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் பைலை ஒப்​படைத்​தனர். இதையடுத்து அவர் நிம்​ம​தி​யுடன் நீட் தேர்வை எழு​தி​னார்.

தேர்​வுக்கு சில நிமிடங்​களே இருந்த நிலை​யில் பத்​திரிகை​யாளர்​கள், போக்​கு​வரத்து கழக அதி​காரி​கள் உதவி​யுடன் நீட் தேர்வு எழு​திய சம்​பவம் நெகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

SCROLL FOR NEXT