கோப்புப் படம்

 
தமிழகம்

புதுவையில் இண்டியா கூட்டணி சிதறியதால் மகிழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி

செய்திப்பிரிவு

புதுச்​சேரி: இந்​தி​யா​வையே அலற வைத்த போலி மருந்து விவ​காரம், பல ஆண்​டு​களாக நிறைவேறாத மாநில அந்​தஸ்​து, நிதி கமிஷனில் புதுச்​சேரியை இது​வரை சேர்க்​காதது, பொதுப் பணித் துறை உயர​தி​காரியே லஞ்ச வழக்​கில் சிக்​கியது என பல்​வேறு பிரச்​சினை​கள் தேசிய ஜனநாயக கூட்டணியை வரிசைக்​கட்டி வலம் வந்​தன.

வழக்​க​மாக வேட்​பாளர் அறி​விப்​பில் தாமதம் செய்​யும் ரங்​க​சாமி, இம்​முறை முந்​திக் கொண்​டார். எதிர்​தரப்​பில், காங்​கிரஸ் - திமுக இடையே ஈகோ​வால் இண்​டியா கூட்​ட​ணியே சிதைந்​து​விட்​டது.

          

காங்​கிரஸில் கட்​சிக்கு கட்​டுப்​ப​டாத போட்டி வேட்​பாளர்​கள் என கூட்​டணி தர்​மத்தை மீறி 22 தொகு​தி​களில் கை சின்​னம் களம் இறங்கி உள்​ளது. இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக உள்​ளிட்ட கட்​சிகள் தாங்​கள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் மட்​டுமே பணி என இண்​டியா கூட்​ட​ணியை விட்டு தனி வழி​யில் களம் இறங்கி விட்​டன. திமுக​வும் தனது தொகு​தி​களில் தேர்​தல் பணி​யில் தீவிரம் காட்டி வரு​கிறது.

காங்​கிரஸுக்​குள் போட்டி வேட்​பாளர்​கள் தொடங்கி உள்​ளுக்​குள் தலை​வர்​களுக்​கான பிரச்​சினை என பல பிரச்​சினை​கள் வரிசைக் கட்டி நிற்​கின்​றன. இண்​டியா கூட்​டணி சிதறிப் போன​தால் என்​டிஏ கூட்​டணி குஷி​யில் உள்​ளது. ஆனால், என்​டிஏ கூட்​ட​ணி​யிலும் என்​.ஆர்​.​காங்​கிரஸில் சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்​காதவர்​கள் தேர்​தல் களத்​தில் சுணக்​க​மாக உள்​ளனர்.

புதுச்​சேரி​யில் கடந்த 2006-க்கு பிறகு இது​வரை உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்​த​வில்​லை. பாஜக மேலிடம் உள்​ளாட்​சித் தேர்​தலை கண்​டிப்​பாக நடத்த விரும்​பு​கிறது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு இன்​னும் 6 மாதங்​களில் உள்​ளாட்​சித் தேர்​தல் வரு​வது உறு​தி. அதில் வாய்ப்பு கிடைக்​கும் என சீட் கிடைக்​காத தனது கட்​சி​யினரை முதல்​வர் ரங்​க​சாமி சமா​தானப்​படுத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT