படம்: நா. தங்கரத்தினம்.

 
தமிழகம்

மோடியும், அமித் ஷாவும் எத்தனை முறை சுற்றினாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: வைகோ

கி.மகாராஜன்

மதுரை: “மோடியும், அமித் ஷாவும் எத்தனை முறை சுற்றினாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது,” என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ கூறியுள்ளார்.

மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் மதிமுக புதூர் பூமிநாதன் தனது வேட்பு மனுவை மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்திருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு டிஎம்எஸ் சிலை முன்பாக வைகோ அவரது பாடல்களை பாடி திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பூமிநாதனுக்கு வாக்கு சேகரித்தார்.

          

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது, தெற்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் புதூர் பூமிநாதன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தமிழகத்தை எத்தனை முறை சுற்றி வந்தாலும் அவர்களால் ஒரு காலமும் இங்கு வெற்றி பெற முடியாது. முதல்வர் வாகனத்தை குடைந்து குடைந்து சோதனை போட்டார்கள் அதில் நான் குற்றம் காணவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அங்கு உள்ள முதல்வர் வாகனத்தை இதுபோன்ற சோதனை செய்தார்களா?.

ஒரு சார்பாக ஒரு நயவஞ்சகத்தோடு முதல்வர் வாகனத்தை சோதனை செய்கிறார்கள். இந்த சோதனைகளுக்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தினர். உள்துறை அமைச்சர் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும், அப்போதுதான் நடுநிலையாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று எண்ணம் எங்களுக்கு வரும்” என்று மாநில தேர்தல் பறக்கும் படையினருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

SCROLL FOR NEXT