சென்னை: ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் நவாஸ் கனி தரப்பில் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையால் சிரி்ப்பலை எழுந்தது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலி்ல் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை விட 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றது செல்லாது அதையடுத்து நவாஸ்கனி தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு முறைகேடுகளை செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், வேட்புமனுவில் சொத்துகள் தொடர்பான பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டி, நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பி்ல் 35-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ்கனி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத், சாட்சி கூண்டில் ஏறி நின்ற மனுதாரர் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்-ன் முந்தைய தொழில்கள் மற் றும் வருமானம் குறித்து எதிர்தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் தொடர்பான கேள்விகளுக்கு தற்போது நினைவில் இல்லை என்றும், தனது ஆடிட்டருக்குத்தான் தெரியும் என்றும் பதிலளித்தார்.
கேள்விகளை மட்டும் கேளுங்கள்: அப்போது நவாஸ்கனி தரப்பி்ல் நிதியமைச்சராக பதவி வகித்தவருக்கு இந்த விவரங்கள் தெரியாதா என்றனர். இதுபோல எதி்ர்தரப்பின் பல்வேறு கேள்விகள் வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்வி களாக உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் இளம்பாரதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் நீதிபதியே நவாஸ்கனி தரப்பு வழக்கறிஞர்களிடம், வழக்குக்கு தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங் கள் என்றார்.
நீதிமன்றத்தில் சிரிப்பலை: அதுவரை ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக ஆவணங்களை படித்துப் பார்த்து பதிலளித்த ஓபிஎஸ், நான்தானே நவாஸ்கனி மீது தேர்தல் வழக்குப் போட்டுள்ளேன். எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நவாஸ்கனி என் மீது வழக்கு போட்டுள்ளது போல சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு குழப்பு கின்றனரே, என்றதும் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு எதிர்தரப்பில் உங்களை குழப்புவதுதான் எங்களது வேலை, என்றனர். அதையடுத்து இந்த குறுக்கு விசாரணை நிறை வடையாததால் வழக்கு விசா ரணையை நீதிபதி வரும் ஜன.9-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.