நயினார் நாகேந்திரன்
சென்னை: லண்டனில் ரூ.15,300 கோடிக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் கூறுவது முற்றிலும் பொய் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகத் தொழில் முதலீடுகள் இரு வகைப்படும்.
ஒன்று ‘கிரீன்ஃபீல்ட்’. அதாவது முற்றிலும் புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள்; மற்றொன்று ‘பிரவுன்ஃபீல்ட்’. அதாவது ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்கள். முதல்வர் புதிதாகத் தொழில்களைத் தொடங்குவதைவிட, ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ‘பிரவுன்ஃபீல்ட்’ திட்டங்களுக்காகவே இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என கருதுகிறேன்.
லண்டனில் ரூ.15,300 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொய். அவை அனைத்தும் ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழில் திட்டங்கள் தான். இதில் புதிய முதலீடு இல்லை. முதல்வர் விஜய், பட்டினப்பாக்கத்துக்கு பதில் வேறு இடத்தை தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.