நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

குதிரை பேரம் பேசுவதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ‘பிஸி’ - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​கா​விரி நீர் பிரச்​சினையை கவனிக்காமல் துறை அமைச்​சரான புஸ்ஸி ஆனந்த், குதிரை பேரம் பேசுவ​தில் பிஸி​யாக இருப்ப​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றச்​சாட்டு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்பாக நெல்லையில் செய்​தியாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு அரசு வேலைக்​கான ஆணை வழங்​கப்பட உள்​ளது வரவேற்​கத்​தக்​கது. கரூர் சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்​பட்​ட​வர் களைச் சந்​தித்து விஜய் ஆறு​தல் தெரிவித்திருக்க வேண்டும். விஜய் அமைச்​சர​வையில் உள்ள காங்​கிரஸ் அமைச்​சர்ஒரு​வரை போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​படும் நிலை உள்​ளது.

விஜய்​யின் நண்​பர் ஜான் ஆரோக்​கிய​சாமி போன்​றோர்அமைச்​சரவைக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​வது அரசி​யலமைப்புச் சட்​டத்​துக்கு எதி​ரானது.அமைச்​சர் புஸ்ஸி ஆனந்த், காவிரிநீரை தமிழகத்​துக்கு கொண்டு வரு​வது குறித்துஎந்த நடவடிக்​கை​யும் எடுக்​காமல், குதிரை பேரத்​தில் பிஸி​யாக உள்​ளார். தற்​போது நடப்​பதுபோன்ற மோச​மான அரசி​யல் இது​வரைதமிழகத்​தில் நடந்​த​தில்​லை. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT