தமிழகம்

அண்ணாமலை பக்கம் சென்ற நிர்வாகிகளால் பாஜகவில் காலியான பதவிகளை நிரப்ப முடிவு: நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணாமலை பக்கம் சென்ற நிர்வாகிகளால் பாஜகவில் காலியான பதவிகளை நிரப்ப நயினார் நாகேந்திரன் உத்தர விட்டுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்டத் தலைவர் கிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 1-ம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்த நிர்வாகிகளால் காலியாக உள்ள

கட்சிப் பதவிகளுக்கு, தகுதியான புதிய நிர்வாகிகளை விரைவில் நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் பேசும்போது, “விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT