ஊட்டி: குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி ஆட்சி அமைக்கும். எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று டிடிவி.
தினகரன் கூறுகிறார். நாங்கள் யாரையும் மிரட்டி, கூட்டணியில் சேர்க்கவில்லை. விஜய்யை மட்டுமல்ல, எந்த தனி நபரையும் விமர்சனம் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
திமுக கூட்டணி பலமாக இருப்பதாக மாயை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக அழிந்து விடும் என்று மற்ற கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.