தமிழகம்

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம்: மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

கர்நாடகாவில் பாஜக போராட்டம் குறித்து கேள்விக்கு விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ​கா​விரி விவ​காரத்​தில் கர்​நாட​கா​வில் பாஜக தலை​வர்​கள் போராட்​டம் நடத்​தி​யிருப்​பது குறித்து மாணிக்​கம் தாகூர் கேள்வி எழுப்​பிய நிலை​யில், மொட்டை தலைக்​கும் முழங்​காலுக்​கும் முடிச்சு போடாதீர்​கள் என நயி​னார் நாகேந்​திரன் பதில் அளித்​துள்​ளார்.

கர்​நாட​கா​வில் “தமிழகத்​துக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்​கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலை​வர்​கள் வீதி​யில் இறங்கி போராட்​டம் நடத்​தி​யதை பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பார்க்​கத் தவறி​விட்​டாரா என தமிழக காங்​கிரஸ் கட்சி தலை​வர் மாணிக்​கம் தாக்​கூர் கேள்வி எழுப்​பிய நிலை​யில், நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் தளத்​தில் அளித்​துள்ள பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: மொட்டை தலைக்​கும் முழங்​காலுக்​கும் முடிச்சு போடாதீர்​கள்.

பிரதமர் மோடி தலை​மையி​லான பாஜக ஆட்​சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது.

மத்​திய பாஜக அரசு அமைத்த ஆணை​யம் தண்​ணீரை வழங்​கு​மாறு உத்​தர​விட்​டும் காங்​கிரஸ் அரசு தமிழகத்​துக்கு தண்​ணீர் தர மறுத்​து​விட்​டது குறித்து முடிந்​தால் கேள்வி கேளுங்​கள்.

அதை ​விட்​டு​விட்டு மத்​திய பாஜக அரசின் மீது பழி​போடு​வது மக்​களை ஏமாற்​றும் செயல். தமிழக முதல்​வரை சந்​திக்க வரு​மாறு கூறி​விட்​டு, பின்பு சாக்​கு​போக்கு சொல்லி கதவை மூடி, அவமானப்​படுத்​தி​யது ஏன் என கர்​நாடக முதல்​வருக்கு முடிந்​தால் கண்​டனம் தெரி​வி​யுங்​கள்.

தமிழக விவ​சா​யிகளின் வயிற்​றில் அடிக்​கும் மேகே​தாட்டு அணை திட்​டத்தை கைவிடு​மாறு எடுத்​துக் கூறுங்​கள். தமிழகத்​துக்கு வந்த ராகுல் காந்​தி, தற்​போது தமிழகத்​தில் பற்றி எரி​யும் காவிரி நீர் பிரச்​சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்​ற​தில் இருந்தே தெரி​கிறது, காங்​கிரஸ்​காரர்​களுக்கு தமிழகத்​தின் மீதுள்ள அக்​கறை.

கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் எப்​போதெல்​லாம் ஆட்​சிக்கு வரு​கிறதோ அப்​போதெல்​லாம் தமிழக விவ​சா​யிகள் வஞ்​சிக்​கப்​படு​கிறார்​கள்.

காவிரி நீர் பிரச்​சினை மட்​டு​மா, கச்​சத்​தீவை தாரை வார்த்து மீனவர்​களுக்​கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்​கிரஸ்.

எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்​கள் எங்​களுக்கு பாடம் எடுக்க வேண்​டாம். தமிழகத்​தின் உரிமையை பாது​காப்​ப​தில் பாஜக என்​றுமே தெளி​வான நிலைப்​பாட்​டில்​தான்​ உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT