நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“திமுகவுக்கு வாக்களித்த மக்கள் நிர்கதியாக நிற்கின்றனர்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​திமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடும்பத்துடன் நிர்கதியாக நிற்கின்றனர் என திமுக அரசை பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில நாட்​களுக்கு முன்பு திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் அரசுப் பள்​ளி​யின் கைப் பிடிச்சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு படிக்​கும் சிறு​வன் உயி​ரிழந்த துயரத்​தில் இருந்தே தமிழகம் இன்​னும் மீண்டு வராத நிலை​யில், கோவை மாவட்​டத்​தில் உள்ள 100 அரசுப் பள்​ளி​களின் சுற்​றுச்​சுவர்​கள் முற்​றி​லு​மாக சிதிலமடைந்து எப்​போது வேண்​டு​மா​னாலும் இடிந்து விழும் அபா​யத்​தில் இருப்​ப​தாக செய்தி வெளி​யாகி​யுள்​ளது.

கோடிக்​கணக்​கில் பணத்​தைக் கொட்டி விளம்பர விழா நடத்த நிதி​யிருக்​கும் திமுக அரசுக்​குப் பிள்​ளை​களின் பாது​காப்பை உறுதி செய்ய மனமில்லை என்​ப​தற்​கான மற்​றொரு சான்று இது. எளிய பின்​புலம் கொண்ட பிள்​ளை​களின் புகலிட​மாகத் திகழும் அரசுப் பள்​ளி​களை எதற்கு இத்​தனை அலட்​சி​யத்​துடன் ஆளும் திமுக அரசு கையாள்​கிறது என்று புரிய​வில்​லை.

அரசுப் பள்​ளி​களில் குடிநீர் வசதி இல்​லாத​தால் பள்ளிகளில் மாணவர்​கள் ஊற்று தோண்டி தண்​ணீர் குடிப்​ப​தை​யும், கழி​வறை இல்​லாத​தால் இயற்கை உபாதை கழிக்க பிள்​ளை​கள் திறந்​த வெளி​களை நாடு​வதை​யும், சத்​துண​வில் புழு, பூச்​சி, பல்​லிகள் மிதப்​ப​தை​யும், புதிய கட்​டிடங்​களின் மேற்​கூரை பெயர்ந்துவிழு​வதை​யும் கண்டு நமக்கு தான் நெஞ்​சம் பதறுகிறதே தவிர, ஆட்​சிக் கட்​டிலில் அமர்ந்திருப்​பவர்​கள் இவற்றையெல்லாம் அமை​தி​யாக வேடிக்கைதான் பார்க்​கிறார்​கள்.

“அரசுப்​பள்​ளி​கள் எனது கோட்​டை” என்று பஞ்ச் வசனம் பேசிய பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் அமை​தி​யாகப் பதுங்​கி​விட்​டார். “நான் உங்​கள் அப்​பா” என சென்​டிமென்ட் வசனம் பேசிய முதல்​வர் மு.க.ஸ்​டாலின், விளம்பர போட்​டோஷூட்​களில் பிஸி​யாகி​விட்​டார். இவர்​களை நம்பி வாக்​களித்த தமிழக மக்​கள் தங்​கள் குடும்​பத்​துடன் நிற்​க​தி​யற்று நிற்​கிறார்​கள்.

அதுசரி, மக்கள் நலனைப்பேணுவதற்கா திமுக ஆட்​சிக்கு வந்​தது, கொள்​ளை​யடிப்​பவர்​களிடம் கொத்து சா​வியைக் கொடுத்​தது தமிழகத்​தின் மிகப்​பெரிய வரலாற்​றுப்​ பிழை. இவ்​வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT