இடது: வி.எஸ்.பாபு | வலது: நயினார் நாகேந்திரன் 

 

கோப்புப் படங்கள்

தமிழகம்

வி.எஸ்.பாபு மறைவுக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல்

வெற்றி மயிலோன்

சென்னை: “கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறி சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்​.​பாபு பிரபலம் அடைந்​தார். அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டதையடுத்​து, சென்னை எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT