சென்னை: தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால், விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவு: தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால், விஜய் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது, உச்ச நீதிமன்ற உத்தரவை, ‘மறு ஆய்வு’ கோரி மனு தாக்கல் செய்திருக்கும் தவெக அரசின் இந்து விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு, விஜய் ஏன் இத்தனை பதறுகிறார்? உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, பிற அமைப்புகள் எல்லாம் அமைதி காக்கையில், தவெக அரசு மட்டும் எதற்கு இப்படி முந்திக் கொண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது, கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறையே, கந்தர் மலையை ‘சிக்கந்தர்’ மலையாக மாற்றத் துடிக்கிறதா, வாக்கு வங்கி அரசியலுக்காக விஜய் இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டுமா? முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் விஜய்க்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.
அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக் கொண்டு, வழிபாட்டு உரிமைகளைத் திட்டமிட்டு பறிக்கும் விஜய்யின் தலைமையிலான இந்து விரோத அரசுக்கு, முருக பக்தர்கள் பாடம் புகட்டுவார் கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.