தமிழகம்

அமைச்சர் ஷாஜகான் தலையீடு காரணமாக அரசு வழங்கும் சந்தனக் கட்டைகளை புறக்கணிக்க நாகூர் தர்கா முடிவு?

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: அமைச்​சர் ஷாஜகானின் தலை​யீடு காரண​மாக, கந்​தூரி விழாவுக்​காக தமிழக அரசு ஆண்​டுதோறும் இல​வச​மாக கொடுக்​கும் சந்​தனக் கட்​டைகளை புறக்​கணிப்​பது என நாகூர் தர்கா நிர்​வாகம் முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

நாகை மாவட்​டம் நாகூர் தர்கா கந்​தூரி விழா ஆண்​டுதோறும் விமரிசையாக நடை​பெறும். இந்த ஆண்​டுக்​கான 470-வது கந்​தூரி திரு​விழா நவ.10-ம் தேதி தொடங்​கு​கிறது. இதில் சந்​தனம் பூசும் நிகழ்​வுக்​காக 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசு சந்​தனக் கட்​டைகளை இல​வச​மாக வழங்கி வரு​கிறது.

அப்​போது முதல் 2017 வரை நாகூர் தர்கா ஆதீனம் காமில் சாகிப்​பும், 2018, 2019 ஆண்​டுகளில் தர்கா நிர்​வாகத்தை நிர்​வகித்த இடைக்​கால நிர்​வாகி​கள் அலா​வுதீன் ஐஏஎஸ் மற்​றும் நீதிபதி அக்​பர் ஆகியோ​ரும் அதற்​கான அரசாணைகளை பெற்​றுக் கொண்டனர்.

2020, 2021-ம் ஆண்​டுகளில் கரோனா பரவல் இருந்​ததால் இதற்​கான அரசாணை தபால் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. 2022-ல் இடைக்​கால நிர்​வாகம் நீக்​கப்​பட்டு, மீண்​டும் பரம்​பரை நிர்​வாகம் நீதி​மன்​றம் மூலம் பொறுப்​பேற்​றது. அதன்​படி, 2022-ல் தலைமை அறங்​காவலர் காமில் சாகிபும், பிரசிடென்ட் கலிபா சாஹிபும் முதல்​வரிடம் இருந்து சந்​தனக் கட்​டைக்​கான அரசாணையை பெற்​றனர். 2023 முதல் கடந்த ஆண்டு வரை தலைமை அறங்​காவலர் காஜி உசேன் சாகிபு, பிரசிடென்ட் கலிபா சாஹிப் ஆகியோர் முதல்​வரிடம் இருந்து அரசாணையை பெற்​றனர்.

அதன்​படி, இந்த ஆண்​டும் அவர்​கள் தான், சந்​தனக் கட்​டைக்​கான அரசாணையை பெற வேண்​டும். ஆனால், இந்த ஆண்டு சிறு​பான்மை நலத்​துறை அமைச்​சர் ஷாஜகான் சார்ந்த இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யைச் சேர்ந்த ஒரு​வரை முன்​னிலைப்​படுத்தி அவரிடம் சந்​தனக் கட்​டைக்​கான அரசா​ரணையை வழங்க ஏற்​பாடு செய்து வரு​வ​தாகவும், இதற்கு வக்ப் வாரியம் ஒத்​துழைப்பு தரு​வ​தாகவும் கூறப்​படு​கிறது.

இதையடுத்து அறங்​காவலர்​கள் குழு​வினர் அமைச்​சர் ஷாஜகானை சந்​தித்து கேட்​டபோது, ‘தலைமை அறங்​காவலரும், புதிய நபரும் சேர்ந்து அரசாணையை பெற்​றுக்​கொள்ள வேண்​டும். இல்​லா​விட்​டால், தர்கா நிர்​வாகத்தை கலைத்து விடுவேன்’ எனக் கூறிய​தாக தெரி​கிறது.

இது​தொடர்​பாக, அறங்​காவலர்​கள் கூட்​டத்​தில்​தான் முடிவு எடுக்க இயலும் என்று அமைச்​சரிடம் சொல்​லி​விட்டு அறங்​காவலர்​கள் நாகூருக்கு திரும்​பிய​தாகவும், இன்று (அக்.21) அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் கூட்​டப்​பட உள்​ள​தாகவும் கூறப்​படு​கிறது. இதில், அமைச்​சரின் அழுத்​தம் காரண​மாக, இந்த ஆண்டு அரசிடம் இருந்து சந்​தனக் கட்​டையை பெறப்​போவது இல்லை என்​றும், 2012-க்கு முன்பு இருந்​த​படி, பக்​தர்​களிடம் இருந்து சந்​தனக் கட்​டைகள் கேட்​டுப் பெறு​வது என்​றும் முடிவெடுக்க உள்​ள​தாக தகவல் வெளியாகி உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT