மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த கிராம பெண்கள்.

 
தமிழகம்

இளைஞர்கள் மது அருந்த தடை; மீறினால் ரூ.5000 அபராதம்: நாகை அருகே பஞ்சாயத்தில் கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: மது பழக்​கத்​தால் சீரழி​யும் இளைஞர்​களின் எதிர்​காலத்தை காக்​க​வும், பொது அமை​தி​யைப் பேண​வும் காவல்​துறை உள்​ளிட்டதுறை​கள் பல்​வேறு விழிப்புணர்வு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கின்​றன. ஆனாலும் மது விற்​பனை​யும், மது அருந்துபவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்​த​பாடில்​லை.

இந்​நிலை​யில் நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி அரு​கே​உள்ள விழுந்​த​மாவடி மீனவ கிராமம் மதுவைக் கட்​டுப்​படுத்த முன்​மா​திரி​யான அதிரடி நடவடிக்​கையை கையில் எடுத்​துள்​ளது. அதன்​படி, கிராமத்​தின் சுகா​தா​ரம் மற்​றும் அமை​தி​யைக் கருத்​தில் கொண்​டு, திரு​மணம் ஆகாத இளைஞர்​கள் மது அருந்த முற்​றி​லு​மாக தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதை மீறி​னால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மது அருந்தக் கூடாது என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

மேலும் திரு​மண​மானவர்​கள் குடித்​து​விட்டு வீட்​டிலோ அல்​லது பொது இடங்​களிலோ தகராறு செய்​வ​தாக புகார் வந்​தால், அவர்​களுக்​கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும். மது அருந்​துபவர்​கள் குறித்து ஊர் தலை​வர்​களிடம் ஆதா​ரம் தரும் நபர்​களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்​கத்​தொகை வழங்​கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘மதுவை ஒழிப்​போம், மக்​களைக் காப்​போம்!’ என்ற முழக்​கத்​துடன் ஊர் பஞ்​சா​யத்து சார்​பில் வைக்​கப்​பட்​டுள்ள விழிப்​புணர்வு பேனர் தற்​போது அப்​பகு​தி​யில் பெரும் கவனத்தை ஈர்த்​துள்​ளது. இக்​கட்​டுப்​பாடு​கள் 10 நாள்​களுக்கு முன்​பே நடை​முறைக்கு வந்​துள்​ளது.

இந்த நடவடிக்​கைகளால் தற்​போது கிராமத்​தில் எவ்​வித தகராறும் இன்றி அமைதி நில​வுவ​தாக ஊர் மக்​கள் மகிழ்ச்சி தெரிவிக்​கின்​றனர். நாகை மாவட்ட நிர்​வாகம், காவல்​துறை ஆகியோர் தரப்​பிலும், சமூக ஆர்​வலர்​களும் இக்​கி​ராமத்​தின் முயற்​சியை தமிழகத்​துக்கே முன்​மா​திரி​யான நடவடிக்கை என பாராட்​டி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT