அண்ணாமலை

 
தமிழகம்

‘உள்ளாட்சித் தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ - அண்ணாமலை கருத்து

செய்திப்பிரிவு

திருப்பூர்: உள்​ளாட்​சித் தேர்​தலில் பெரிய மாற்​றத்தை உரு​வாக்க வேண்​டும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் அண்​ணா​மலை வலியுறுத்​தினார்.

திருப்​பூர் மாவட்​டம் பொங்​கலூரில் கடந்த மாதம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்​பில் மாரத்​தான் போட்டி நடை​பெற்​றது. இது​தொடர்​பாக அல​குமலை​யில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்பு நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் அண்​ணா​மலை பேசிய​தாவது: ஆளும் கட்​சி​யாக இருக்​கும்​போது செய்​வது சரி, எதிர்க்​கட்​சி​யாக இருக்​கும்​போது செய்​வது தவறு என்று இரண்டு பேரும் சண்​டை​யிட்​டுக் கொள்ள வேண்​டும் என்​ப​து​தான் அரசி​ய​லாக உள்​ளது.

நமது அரசி​யல் என்​பது மாற்​றத்​துக்​கான அரசி​ய​லாக இருக்க வேண்​டும். இந்த அமைப்​பில் தற்​போது 21 லட்​சம் பேர் நம்​பிக்​கையுடன் பதிவு செய்து வந்​துள்​ளனர். நாம் அரசி​யலை மக்​கள் பக்​கம் கொண்டு வரு​கிறோம். உள்​ளாட்​சித் தேர்​தலில் பெரிய மாற்​றத்தை உரு​வாக்க வேண்​டும். இதற்கு ஊரை மட்​டும் முன்​னிலைப்​படுத்​தக்​கூடிய நபர்​களை தேர்வு செய்ய வேண்​டும்.

தமிழகத்​தில் உடற்​பயிற்​சிக்கு முக்​கியத்​து​வம் அளிக்க வேண்​டும். குறிப்​பாக, குழந்​தைகளை பங்​கேற்​கச் செய்து, அவர்​களை செல்​போன்​களில் இருந்து வெளியே கொண்​டுவர வேண்​டும். சமூகத்​தில் நாம் என்ன செய்​தா​லும் குற்​றம் சொல்​பவர்​கள் இருக்​கத்​தான் செய்​வார்​கள்.

அடுத்​தகட்ட அரசி​யல் பயணத்​துக்கு உங்​களை நீங்​களே செதுக்​கிக் கொள்ள வேண்​டும். சாதி, மதம் என அனைத்​தையும் தூக்கி எறிந்​து​விட்டு, மனிதனை மனித​னாக ஏற்று செயல்​பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT