ஜெயந்தி குமரேஷ், சுகந்தா காளமேகம், நரேந்திரன், சுப்பிரமணியம், பி.பாலசுப்பிரமணியன், ஜி.நரேந்திரா, ஏ.ஜனார்த்தனன், ராஜேஸ்வரி

 
தமிழகம்

மியூசிக் அகாடமியின் 100-வது ஆண்டு விருதுகள் அறிவிப்பு

ஜெயந்தி குமரேஷுக்கு ‘சங்​கீத கலாநி​தி’, நரேந்​தி​ரா​வுக்கு ‘நிருத்ய கலாநி​தி’

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யின் நிர்​வாகக் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘சங்​கீத கலாநி​தி’, ‘நிருத்​ய கலாநி​தி’ உள்​ளிட்ட விருதுகளைப் பெறும் கலைஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து மியூசிக் அகாடமி தலை​வர் ‘இந்து’ என்​.​முரளி வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: இசை உலகில் மிகப் பெரிய கவுர​வ​மாக கருதப்​படும் மியூசிக் அகாட​மி​யின் விருதுகளுக்கு இசைக் கலைஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

          

சங்​கீத கலாநி​தி: இசைப் பாரம்​பரியமிக்க லால்​குடி குடும்​பத்​தில் இருந்து வந்த வீணை இசைக் கலைஞர் டாக்​டர் ஜெயந்தி குமரேஷ், ‘சங்​கீத கலாநி​தி’ விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தனது தாய் ராஜலட்​சுமி, பத்​மாவதி அனந்​தகோ​பாலன், எஸ்​.​பாலச்​சந்​தர், லால்​குடி ஜெய​ராமன், டி.பிருந்​தா, தஞ்​சாவூர் சங்​கரய்​யர், டி.ஆர்​.சுப்​பிரமணி​யத்​திடம் பயின்​றவர். இசைத் துறை​யில் பிஎச்​.டி. பட்​டம் பெற்​றவர்.

சங்​கீத கலா ஆச்​சார்யா (2 பேர்): கர்​னாடக இசைப் பாடகி சுகந்தா காளமேகம். இவர் கடை​யம் கிருஷ்ண​மூர்த்​தி, கோபாலய்​யர், சந்​தி​யா​வந்​தனம் சீனி​வாச​ராவ், டி.கே.கோ​விந்​த​ராவ் ஆகியோரிடம் கர்​னாடக இசை​யும், டெல்லி காந்​தர்வ மகா வித்​யால​யா​வில் இந்​துஸ்​தானி​யும், திரு​வனந்​த​புரம் ஆர்​.வெங்​கட​ராமனிடம் வீணை​யும் பயின்​றவர்.

மிருதங்க வித்​வான் திருச்​சூர் சி.நரேந்​திரன் 7 வயதில் இசைப்பயிற்சி தொடங்​கிய​வர். கே.பரமேஸ்​வரன் நம்​பூ​திரி, குன்​னங்​குளம் டேவிட் பாகவதர், இ.பி.​நா​ராயண பிசரோடி, கொடு​வாயூர் ராதாகிருஷ்ணன், பாலக்​காடு ஆர்​.ரகு​விடம் மிருதங்​கம் பயின்​றவர்.

டிடிகே விருது (2 பேர்): நாகஸ்​வரக் கலைஞர் இஞ்​சிக்​குடி சுப்​பிரமணி​யம். இவர் தனது தந்தை முத்​துக்​கு​மார​சாமி பிள்​ளை​யிட​மும், அய்​யா​சாமிப் பிள்​ளை, திரு​மா​காளம் வி.சோ​மாஸ்​கந்​தம் பிள்​ளை​யிட​மும் பயின்​றவர். வயலின் கலைஞர் டிகே​வி.​ரா​மானுஜாச்​சார்​யுலு. இவர் தனது தந்​தை​யிடம் பயிற்​சி​யைத் தொடங்​கி, கிருஷ்ண​மாச்​சார்​யுலு​விடம் பயிற்சி பெற்​றார்.

டிகேவி.ராமானுஜாச்சார்யுலு, டி.கே.பத்மநாபன்

இசை அறிஞர் விருது: அமெரிக்​கா​வின் வெஸ்​லியன் பல்​கலைக்​கழகத்​தில் குளோபல் சவுத் ஏசி​யன் ஸ்டடீஸ் பிரி​வின் இணை தலை​வரும், இசைத் துறை இணை பேராசிரியரு​மான டாக்​டர் பி.​பாலசுப்​பிரமணி​யன், இசை அறிஞர் விருது பெறுகிறார்.

நடன விருதுகள் நிருத்ய கலாநி​தி: பரத​நாட்​டியக் கலைஞர் ஜி.நரேந்​தி​ரா, விருதுக்​குத் தேர்​வாகி​யுள்​ளார். இவர் கலாஷேத்​ரா​வில் முது​நிலைப் பட்​டம் பெற்​றவர். ‘அவிக்னா டான்ஸ் என்​செம்​பிள்’ நிறு​வனத்தை தொடங்கி அதன் இயக்​குந​ராக உள்​ளார்.

நிருத்ய கலா ஆச்​சார்​யா: நடனக் கலைஞர் ஏ.ஜ​னார்த்​தனன், இந்த விருதைப் பெறுகிறார். இவர் கலாஷேத்​ரா​வில் ருக்​மிணி தேவி அருண்​டேலிடம் பரத​நாட்​டிய​மும், தனது தந்தை டி.கே.சந்து பணிக்​கரிடம் கதகளி​யும் பயின்​றவர்.

நடன இசைக் கலைஞர் (பாட்​டு): பாடகி​யும், பாட்டு ஆசிரியை​யு​மான எஸ்​.​ராஜேஸ்​வரி இந்த விருதைப் பெறுகிறார். இவர் தஞ்சை பாலசுப்​பிரமணி​யம், ராம​நாத​புரம் கிருஷ்ணன், டி.​முக்​தா​விடம் இசை பயின்​றவர்.

நடன இசைக் கலைஞர் (வாத்​தி​யம்): வயலின் கலைஞர் டி.கே.பத்​ம​நாபன் இந்த விருதைப்பெறுகிறார். பார்​வையற்ற மாற்​றுத் திற​னாளி​யான இவர் பக்​க​வாத்​தி​யம் மட்​டுமின்றி தனி கச்​சேரி​களும் வழங்​கி​யுள்​ளார்.

மியூசிக் அகாட​மி​யின் 100-வது ஆண்டு கருத்​தரங்​கு​கள் 2026 டிச.15 தொடங்​கி, 2027 ஜன.1-ம் தேதி வரை நடை​பெறும். ‘சங்​கீத கலாநி​தி’ விரு​தாளர் ஜெயந்தி குமரேஷ் தலைமை தாங்​கு​வார். ஜன.1-ல் நடை​பெறும் சதஸ் நிகழ்​வில் இசைத் துறை விருதுகளும், ஜன.3-ல் நடை​பெறும் 20-வது ஆண்டு நாட்​டிய விழா​வில் நடனத் துறை விருதுகளும் வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT